Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 3, 2015

Unknown

தொடர்ந்து செல்லும் சிலை விவகாரம்..! பொலிஸில் இரண்டாவது முறைப்பாடு ..! முடித்து வைப்பது யார்..?


(எம்.எல். அப்துல் அஸீஸ்)

திறக்கப்படவிருக்கும் காத்தான்குடி நூதன சாலையில் வைக்கப்படப் போவதாகச் சொல்லும் சிலைகள்  தொடர்பாக கடந்த பல வாரங்களாக உடன்பாடான மற்றும் முரண்பாடான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த சிலை விவகாரம் முகநூலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த்தி இருக்கிறது. ஆளையாள் மாறிமாறி ஏசிக் கொள்வதும் பத்வாக்களை வழங்கிக் கொள்வதும் மாத்திரமல்லாமல் ஒருவர் மற்றவருடைய பரம்பரையை குறை காணுகின்ற அளவிற்கு இந்த சிலை விவகாரம் சென்றிருக்கிறது. சம்மேளனம், உலமாசபை இவற்றையெல்லாம் தாண்டி இப்போது இந்தப் பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.


இந்த சிலை விவகாரம் மார்க்கத்தோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பதால் இதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு சம்மேளனத்தை விட உலமா சபைக்கே அதிகமிருக்கிறது. ஆனால் அண்மையில் கூடிய உலமா சபையினாலும் இதனை தீர்த்து வைக்க முடியாமல் மௌலவிமார்கள் சிலருக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒரு மௌலவிக்கு எதிராக முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

ஊர்ப்பிரச்சினைகள் என்றால் அவை சம்மேளனத்தினாலும், மார்க்கப்பிரச்சினை என்றலால் அவை உலமாசபையினாலும் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றே மக்கள் நம்புகின்றார்கள். கடந்த காலங்ளில் பல விமர்சனங்கள் இருந்தாலும் மேற் குறிப்பிட்ட நிறுவனங்களே அவற்றைத் தீர்த்தும் வைத்திருக்கின்றன.

ஆனால் இந்த சில விவகாரத்தில் அண்மையில் உலமா சபையில் ஏற்பட்ட உலமாக்களுக்கிடையிலான உடன்பாடில்லாத கருத்துக்களாலும், நாகரீகமில்லாத நடவடிக்கைகளாலும் குறிப்பிட்ட சிலரின் ஆலோசனைக்கு அமைவாகவே சிலரால் மார்க்கத்தீர்பு வழங்க முற்பட்டதாலும் இப்போது மக்கள் உலமா சபைமீது நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் தாக்கம் இப்போது தஃவா அமைப்புக்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. மார்க்கத்தோடு மட்டுமல்லாது பொதுவிடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்படும் தஃவா அமைப்புக்கள் சம காலப் பிரச்சினைகளில் மிகவும் கூடிய கரிசனை காட்டுவதையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.

இதனடிப்படையிலேயே கடந்த வாரம் குபா பள்ளிவாயலில் அஸ்பர் மௌலவி அவர்களால் காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வருகின்ற நூதனசாலையில் 'சிலைகளை காட்சிப்படுத்துவது இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணானது' என்ற தொனிப் பொருளில் குத்பா ஓதப்பட்டிருக்கிறது. இந்த குத்பா பிரசங்கம் தொடர்பில் அரசியல்வாதி ஒருவரால் காத்தான்குடி பொலிஸி நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அஸ்பர் மௌலவி அவர்கள் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்ததாகவும் தற்போது அறிய முடிகிறது (இது தொடர்பான முழுமையான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் அறியத்தரமுடியும்)

உலமாக்களின் கடமை இஸ்லாத்தை அதன் தூய வழியில் சொல்லது இதனை அரசியல் மயமாக்கி பொலிஸ் நிலையம் வரை கொண்டு செல்வது முறையான செயலல்ல என்பதுவே பொதுவான் கருத்தாகும்.

அரசியல் தரப்பு சிலைவவைப்பதற்கு இஸ்லாத்தில் ஆகும் என்ற பத்வாவைக் காட்டிக் கொண்டிருக்க இதனை சில உலமாக்கள் வழிமொழிந்து கொண்டிருக்கிறார்கள். உலமா சபையின் உள்ளே பல உலமாக்களும், உள்ளேயும் வெளிNயுமாக பல தஃவா அமைப்புக்களும் இதனை ஹறாம் என்று தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கின்றன.

உலமாக்களிடம் ஒரு தெளிவான பத்வாவை வேண்டி நிற்கும் பொது மக்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைத் தீர்த்து வைப்பது யார்..?; உலமா சபையையும் சம்மேளனத்தையும் மக்கள் இதனுடைய தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். பொறுப்புள்ள நிறுவனங்கள் என்ற வகையில் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து உடனடியாக இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கொண்டு வர வேண்டும். அது அல்லாஹ்கு மாத்திரம் பயந்ததாக இருக்க வேண்டும்.


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :