சவுதி அரேபியாவின் அல் இமாம் சுஊத் பல்கலைக்கழகத்தின் கிழக்காசியாவுக்கானதொலைக் கல்விக்கிளை காத்தான்குடியில்திறக்கப்படவுள்ளது.
இந்நிலையத்தினை அமுல்படுத்துவதற்கு தேவையானசெயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதற்கு அல் இமாம்சுஊத் பல்கலைக் கழகத்தின் தொலைக்கல்விபிரிவிற்கு பொறுப்பானபணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹ்மத் அஸ்ஸுதைஸ் மற்றும் சர்வதேச மனிதவளஅபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்துக்கான பொறுப்பதிகாரிஅஷ்ஷெய்க் காலித் அத்தாவூத் ஆகியோர் மட்டக்களப்பு பல்கலைக்கழககல்லூரிக்கு இன்று 16.03.2015திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ளனர்.
காத்தான்குடி அல் மனார் அர் ராஷித்கேட்போர் கூடத்தில் இன்று மாலை 6:30 மணிக்குநடைபெறவுள்ளஇக்கலந்துரையாடலுக்குமட்டக்களப் பு,அம்பாரை, பொலந்நறுவை மற்றும்திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த உலமாக்கள் அழைக்கப்பட்டிருப்பதாகவும்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
