Featured Home (TOP)

Recent Comments

Monday, March 16, 2015

Unknown

ஆதரவாளர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் : கோத்தபாய ராஜபக்ஷ

"அர­சி­யல்­வா­திகள் என்னைக் கைது செய்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றனர். அத்­துடன் சிலர் உயிர் அச்­சு­றுத்­தலும் விடுத்து வரு­கின்­றனர்.

என்­னிடம் அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை உள்­ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் கொன்று விடுவார்கள் என்று முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

சிங்­கள ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லா­ள­ரான கோத்தபாய ராஜ­பக்‌ஷ மேலும் தெரிவிக்கையில்;
"நான் எந்தக் குற்­றங்­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. ஆனால் என்னைக் கைது செய்­யப்­போ­கின்­றனர் என அர­சி­யல்­வா­திகள் மிரட்­டு­கின்­றனர். அத்­துடன் என்னைக் கொலை செய்யப் போகின்­றனர் எனவும் அவர்­களில் சிலர் மிரட்­டு­கின்­றனர்.
நான் அர­சி­யல்­வா­தி­யல்ல தவிர அர­சியல் கட்சி ஒன்றில் உறுப்­பி­ன­ராகக் கூட இருக்­க­வில்லை. அப்­ப­டி­யி­ருக்­கையில் எந்த அடிப்­ப­டையில் என்னைக் கைது செய்­யப்­போ­கி­றார்கள். இந்த அர­சாங்கம் என்னைப் பழி­வாங்கும் நட­வ­டிக்­கையில் துரத்தித் துரத்தித் துன்­பங்­களைத் தரு­கின்­றது. நான் அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை வைத்­தி­ருக்­கிறேன். ஆனால் அங்கு செல்ல மாட்டேன். ஏனெனில் அங்கு சென்றால் என்னைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிச்சயம் கொன்று விடுவார்கள்"- என்றார். -
Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :