காத்தான்குடி தள வைத்திய சாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் கௌரவ ஹசன்அலி (பா.உ) அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேடகுழுவொன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் அழைப்பின்பேரில் கடந்த 25.02.2015ம்திகதி (புதன்கிழமை) காலை 10.00மணிக்கு வருகைதரவிருந்தது.
கௌரவ அமைச்சர் ஹசன் அலி (பா.உ) அவர்கள் அன்றையதினம் முல்லைத்தீவிற்கு முக்கிய விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்ததால் இந்நிகழ்வானது தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டது.
மேலும் இந்நிகழ்வானது இம்மாதம் ௦9ம் திகதி திங்கட்கிழமை மதியம் 12.௦௦ மணிக்கு இடம்பெறும் எனகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )
