தேர்தல் முறையை மாற்றவேண்டும் என்ற தேவை இருந்தால் அதனை நிச்சயம் இந்த 100 நாள் பகுதியில் மாற்றியமைக்கலாம். நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கி்ன்ற இந்த காலத்தில் எல்லை நிர்ணயம் குறுகிய காலப்பகுதியில் செய்யலாம். மேலும் நாட்டின் தேசிய பிரச்சினைக்கும் நாங்கள் தீர்வுகாண்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற சமூக நீதிக்கான அமைப்பான நிபுணத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாறறிய அமைச்சர் சேனாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பொதுவாக எமது நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கும். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். பின்னர் தேர்தலில் வெற்றிபெற்றதும் வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள். இதுதான் வழமையாக இருந்துள்ளது.
ஆனால் ஜனவரி எட்டாம் திகதி தேர்தலில் பெற்ற வெற்றியானது ஒரு அரசியல் கட்சியினால் பெறப்பட்டதல்ல. மாறாக நாட்டின் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த வெற்றியை பெற்றன. சிவில் அமைப்புக்கள் பாரிய பங்களிப்பை வழங்கின. இந்நிலையில் 100 நாள் திட்டத்தை முன்வைத்து வெற்றிபெற்றோம்.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகின்றனர் என்பது முக்கியமல்ல. மாறாக இந்த 100 நாட்களில் அல்லது 120 மற்றும் 150 நாட்களில் என்ன செய்யப்போகின்றோம் என்பதே இங்கு முக்கியமாகும். 150 நாட்கள் சென்றாலும் பரவாயில்லை என்ன செய்யப்போகின்றோம் என்பதே இங்கு முககியமாகும். இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் நாங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்யப்போகின்றோம் என்பதே முக்கியமான விடயமாகும்.
இந்த மாற்றங்களில் மிக முக்கியமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றுதல் மற்றும் தேர்தல் முறையை மாற்றுதல் என்பனவே மிக முக்கியமானதாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நாங்கள் 1977 ஆம் ஆண்டிலிருந்து கஸ்டப்பட்டுவருகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவர் அந்த அதிகாரங்களை பயன்படுத்திய விதத்தைக்கண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்ற விடயம் முன்னுரிமை பெற்றது.
இதனை வலியுறுத்த ஆரம்பித்த மக்கள் வௌியே வந்து போராடினர். நாங்களும் வௌியில் வந்தோம். மக்களின் ஆணையை பெற்று வெற்றியீட்டினோம். வேற்றிபெற்றிருக்காவிட்டால் சிறைக்கு சென்றிருப்போம்.
இந்ிநலையில் 100 நாட்களுக்குள் செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. .இந்த செயற்பாடு: தொடர்பில் சிவில் அமைப்புக்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். இதனை அரசியல்வாதிகளிடம் கொடுத்துவிடக்கூடாது. தற்போதைய நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியைவிட அரசியலமைப்பு திருத்த விடயத்தில் நல்ல நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இறுதி தீர்மானம் எடுக்கவில்லை. சுதந்திரக் கட்சிய்ின் மத்திய குழு விரைவில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும். 62 இலட்சம் மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். வில்லியம் கொபல்லாவ போன்று செயற்படுவதற்கு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வாக்களிக்கவில்லை என்பதகை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே அவருக்கு சில அதிகாரங்களை வழங்கவேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் இரண்டு விடயங்கள் மிகவும் ஆபத்தானவையாகும். அதாவது ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு போட முடியாது. அடுத்ததாக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புகூறவேண்டிய தேவையில்லை. பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானங்களை ஜனாதிபதி சவாலுக்கு உட்படுத்தலாம். இவை இரண்டையும் நீக்கவேண்டும். எனினும் தற்போதைய ஜனாதிபதிக்கு அவரது இந்த பதவிக்காலத்துக்கு சில அதிகாரங்களை வழங்கவேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்துக்கு பின்னர் ஜனாதிபதி முறையை முற்றாக நீக்கிவிடலாம். தேவை எனின் இந்தியாவில் போன்ற ஒரு ஜனாதிபதி முறையை கொண்டுவரலாம். ஜனாதிபதி சிறிசேனிவின் முதலாவது பதவிக்காலம் முடிந்த பின்னர் அந்த நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமிக்கலாம். அதனை எம்மால் செய்ய முடியும். இதனை நான் சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கூறியுள்ளேன். ஆதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. இறுதியில் இவை தெடர்பில் கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுக்கும். எனவே அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இறுதி முடிவு எடுத்துவிட்டதாக யாரும் எண்ண வேண்டாம்.
அடுத்ததாக தேர்தல் முறை மாற்றம் மிகவும் முககியமாகும். முன்னைய மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே தேர்தல் முறையை மாற்றவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆனால் முடியவில்லை. இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதனை விட பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றுவதே பிரதான தேவையாக உள்ளது. மக்களுடன் நெருங்கி செயற்படுகின்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள். எனவே அவர்களை தெரிவு செய்வதில் சிறந்த தேர்தல் முறை அவசியமாகும்.
நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்தே தீரவேண் டும். இந்த 100 நாட்களில் தேர்தல் முறையை கட்டாயம் மாற் றியமைக்க வேண்டும். இல்லாவிடின் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் னர் இதனை செய்ய முடியாமல் போய்விடும். தேர்தல் முறை மாறாவிடின். இன்னும் 10 வருடங்களில் வெறும் முதலாளிமாரே பாராளுமன்றத்தில் இருப்பார்கள் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.