Featured Home (TOP)

Recent Comments

Tuesday, March 3, 2015

Unknown

உமர் பாலர் பாடசாலை பாலர்களுக்கு NFGGயில் கற்றல், விளையாட்டு உபகரணங்ககள் அன்பளிப்பு

ஊடகப்பிரிவு -நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


புதிய காத்தான்குடி அப்ரார் பகுதியில் இயங்கிவரும் உமர் சனசமூக நிலையத்தின் பாலர் பாடசாலை பாலர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் (NFGG) கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்ககள் வழங்கி வைக்கப்பட்டன.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கல்வி மையத்தில் இன்று (03.03.2015) காலை இடம்பெற்ற நிகழ்வின்போதே மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இதன்போது காத்தான்குடி நகரசாபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், PMGGயின் சூறாசபை உறுப்பினர் களான KMA.காதர், MIA.அலீம் மற்றும் உமர் சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள் உட்பட உமர் பாலர் பாடசாலையின் பாலர்கள், ஆசிரியைகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டமான நிலையில் இயங்கிவரும் இந்தப் பாலர் பாடசாலைக்கான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்று உமர் சனசமூக நிலையத்தின் நிருவாகிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக NFGGயினால் இந்த  கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்ககள் வழங்ககப்பட்டன.





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :