Featured Home (TOP)

Recent Comments

Wednesday, April 29, 2015

Unknown

வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் ! ஆரம்ப நிகழ்வு காத்தான்குடியில்

-எம்.எச்.எம்.அன்வர்-

வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் எனும் தெரனிப்பொருளில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 3 பிரவுகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று 167ஏ 167பி மற்றும் 165 ஏ கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அமைச்சின் இணைப்பச்செயலாளருமான யு எல் எம் என் முபீன் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ் எச் அஸ்பர் உட்பட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மேற்படி நிகழ்வில்  கலந்துகொண்டனர்

167 ஏ கிராம சேவகர் பிரிவுக்கு வடிகான் அமைக்கும் வேலைத்திட்டமும் 167பி பிரிவுக்கு வாழ்வாதார நிலையம் அமைக்கும் வேலைத்திட்டமும் 165ஏ கிராம சேவகர் பிரிவுக்கு பல்நோக்கு கட்டட அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றன

165ஏ கிராம சேவகர் எச் எம் அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்ற பல்நோக்கு கட்டட அடிக்கல் நடும் நிகழ்வும் அதன் ஆரம்ப நிகழ்வின்போதும் எடுக்கப்பட்ட படங்களை இத்துடன் காணலாம்; 







Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :