Featured Home (TOP)

Recent Comments

Thursday, April 30, 2015

Unknown

புதிய தேர்தல் முறையை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற நட­வ­டிக்கை

புதிய தேர்தல் முறையை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதற்­கான செயற்­பா­டு­களை இன்­றி­லி­ருந்து (நேற்று முதல்) ஆரம்­பித்­து­விட்டோம். 

அத்­துடன், எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை புதிய முறையில் நடத்­தவே முயற்­சிக்­கின்றோம் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 

தேர்தல் முறையில் மாற்­றத்தைக் கொண்­டு­ வ­ர­வேண்டும் என்­பதில் அனைத்து கட்­சி­களும் புரிந்­து­ணர்­வுக்கு வந்­துள்­ளன. ஆனால், எவ்­வா­றான முறையை முன்­னெ­டுப்­பது என்­பதில் இன்னும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் முன்னர் புதிய தேர்தல் முறையை அறி­மு­கப்­ப­டுத்தி அதனை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை தற்­போதே ஆரம்­பித்­து­விட்டோம். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை புதிய முறையில் நடத்­தவே முயற்­சிக்­கின்றோம். அதனை செய்ய முடியும் என்றும் நம்­பு­கின்றோம்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து கட்­சி­களும் புரிந்­து­ணர்­வுக்கு வந்­துள்­ளன. ஆனால் எவ்­வா­றான முறையை முன்­னெ­டுப்­பது என்­பதில் இன்னும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. ஆனால் இந்த விட­யத்தில் இணக்­கப்­பாட்டை எட்ட முடியும் என்­பது எமது நம்­பிக்­கை­யாகும்.

தற்­போது இரண்டு முறை­மைகள் எமது பரி­சீ­ல­னையில் உள்­ளன. அவற்றை மேலும் முன்­னேற்றி கொண்­டு­வ­ர­லாமா என்று சிந்­திக்­கின்றோம். ஆனால் பொருத்­த­மா­னதை தெரிவு செய்வோம். சிறு­பான்மை மற்றும் சிறு அர­சியல் கட்­சி­க­ளுக்கு எவ்­வி­த­மான பாதிப்பும் ஏற்­ப­டாத வகை­யி­லேயே இந்த புதிய தேர்தல் முறையை கொண்­டு­வ­ருவோம்.

தேர்தல் முறை மாற்­றப்­ப­டு­மி­டத்து எல்லை மீள் நிர்­ணய செயற்­பாட்­டி­லேயே பாரிய சிக்கல் உள்­ளது. அதா­வது தற்­போ­தைய தேர்தல் முறை­மையின் பிர­காரம் தேர்தல் தொகு­திகள் வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக தேர்தல் மாவட்­டங்­களே பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எனவே தொகுதி முறை­யி­லான தேர்தல் முறை வந்தால் தேர்தல் தொகு­தி­களை வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­த­வேண்டும்.

அப்­போது தொகுதி மட்­டத்தில் உள்ள வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்­கையில் சிக்கல் வரலாம். அதா­வது ஒரு தொகு­தியில் ஒரு இலட்­சத்து 70 ஆயிரம் வாக்­கா­ளர்­களும் மற்­று­மொரு தொகு­தியில் 40 ஆயிரம் வாக்­கா­ளர்­களும் இருந்தால் அது சிக்­க­லா­கி­விடும். யாரா­வது உயர்­நீ­தி­மன்­றத்தை நாடினால் மேலும் பிரச்சினைகள் வரலாம். எனவே இவை தொடர்பில் நன்றாக சிந்தித்து ஒரு பொருத்தமான முறையை தெரிவு செய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதேவேளை பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம். சரியான திகதியை என்னால் கூற முடியாது. ஆனால் விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றார்.

- TNN

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :