Featured Home (TOP)

Recent Comments

Friday, May 1, 2015

Unknown

"உதயசிறியின் விடுதலைக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசியமுன்னணி நன்றி தெரிவிக்கின்றது"

( ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி)

"வரலாற்று சிறப்பு மிக்க சீகிரிய குன்றில் உள்ள புராதன சுவரில் தனது பெயரினை கிறுக்கிய குற்றத்திற்காககைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த உதயசிறி இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது மகிழ்ச்சிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இவருக்கு பொது மன்னிப்பினை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது" என இது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.,

"மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த 28 வயதான சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி சீகிரிய குன்றினைப் பார்வையிடச் சென்ற சமயத்தில் அங்குள்ள புராதன சின்னங்கள் தாங்கிய சுவரில் தனது பெயரினைக் கிறுக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதி மன்றத்தினால் 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, அனுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
எனினும் இவ்வாறு சுவரில் தனது பெயரை கிறுக்குவது பாரிய குற்றம் என்பதினை அறியாத நிலையிலேயே இதனை அவர் மேற்கொண்டார் எனும் அடிப்படையில் இவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென மத்திய மாகாண மேல் நீதி மன்றத்தில் இரு மேன் முறையீடுகள் செய்யப்பட்டதுடன், பல சமூக அமைப்புகள், ஊடகங்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் தலைவர்களும்கூட இதற்காக ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன் காரணமாக கடந்த சித்திரைப் புதுவருடப்பிறப்பிற்கு முன்னதாக ஜனாதிபதி உதயசிறிக்கு பொது மன்னிப்பினை வழங்கி, அவரை விடுதலை செய்ய பணிப்புரை வழங்கியிருந்தார். எனினும் ஏற்கனவே மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறையீடுகளை வாபஸ் பெறுவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள், மற்றும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டிருந்த அரச விடுமுறை போன்ற பல்வேறு காரணங்களினால் உதயசிறி விடுதலை தாமதப்படுத்தப்பட்டு அவர் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும் பலரின் கவனத்தினையும் அனுதாபத்தினையும் பெற்றுக்கொண்டிருந்த உதயசிறி இன்றைய தினம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி மிகுந்த வறுமைக்கோட்டின்கீழ் வாழுகின்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதுடன் அவர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து, தனது குடும்பத்தினை காப்பாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியறிவோ அல்லது முறையான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கின்ற வசதிகளையோ தங்களால் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்களது நியாயங்களை நீதி மன்றத்தில் முன்வைக்க முடியாது போனதாக, உதயசிறியின் தாய் ஊடகங்களுக்குத் தெரிவித்திருத்தார்.
இந்நிலையில் அக்குடும்பத்திற்கான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டிருந்ததுடன், அதன் பிரதிநிதிகள் குறித்த யுவதியின் வீட்டிற்கும் பல முறை விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு பொருளாதார உதவியினையும் வழங்கியிருந்தது. அத்துடன் அவருக்கு பொது மன்னிப்பினை வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டுமென ஜனாதிபதிக்கும் வேண்டுகோள் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள உதயசிறியின் விடுதலைக்காகப் பாடுபட்ட, குரல் கொடுத்த அனைவருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது . குறிப்பாக இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி சட்டரீதியில் முயற்சிகளை மேற்கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஷ் நூர்தீன், தட்சினா மூர்த்தி, ருஷ்தி ஹபீப் போன்றவர்களுக்கும், இது தொடர்பில் அதிக அக்கறையுடன் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்த சக்தி தொலைகாட்சி, விடிவெள்ளி பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களுக்கும். அத்தோடு இது தொடர்பில் குரல் கொடுத்த அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஏனைய சமூக அமைப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது"

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :