தான் முதுகெலும்பு பலமில்லாத தலைவர், மனிதர், பதவிக்கு பொருத்தமற்றவர் போன்ற கதைகளை கேட்க முடிந்ததாகவும் தான் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தாத காரணத்தினாலேயே இப்படியான கதைகள் உருவாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தன்னை பற்றி எந்த விதத்தில் கதைகளை பேசினாலும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவே மக்கள் தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்தாகவும் இதனால் ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்த போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் செய்தது ஒன்றுமில்லை என சிலர் கூறினாலும் இந்த காலப் பகுதியில் சர்வதேச ரீதியில் இருந்து வந்த சவால்களை வெற்றி கொண்டு நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
நாட்டுக்கு எதிரான சர்வதேச எதிரிகளை இல்லாமல் செய்தது போல், நாட்டிற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை அபிவிருத்தி செய்ய போவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
