Featured Home (TOP)

Recent Comments

Saturday, April 25, 2015

Unknown

"அடுத்த அமர்விலும் நிறைவேறாது'

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 19வது திருத்­தச்­சட்­டத்­தினை நிறை­வேற்­றாது தடுக்க மீண்டும் சதித்­திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது. அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­விலும் 19 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­ப­டாது என சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வர் ­மா­து­லுவாவே சோபித தேரர் ­தெ­ரி­வித்தார்.
மக்­களை ஏமாற்றும் வேலை­யினை செய்­வதில் மஹிந்த ராஜ­ப­க்ஷவை போன்றே ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் செயற்­ப­டு­வ­தாகவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

அர­சியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ள நிலை­யில்­ இது குறித்த அ­வ­ரது நிலைப்­பாட்­டினை வின­விய போதே மதுலுவாவே சோபித தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­னது.
தேசிய அர­சாங்­கத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருந்த போதிலும் இன்­று­வரை அவ் வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஏதோ ஒரு கார­ணத்தை முன்­வைத்து 19ஐ நிறை­வேற்­றாது தடுத்து வரு­கின்­றனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை கொடுத்து எவ்­வாறு ஏமாற்­றி­னாரோ அதே வேலை­யினை இந்த அர­சாங்­க­மமும் செய்­கின்­றதா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. நுறு நாட்கள் வேலைத்­திட்­டத்தில் பிர­தா­ன­மான கார­ணி­யாக குறிப்­பி­டப்­பட்ட 19வது திருத்­தச்­சட்­டத்­தினை இவர்கள் நிறை­வேற்­றா­விடின் இந்த அர­சாங்கம் உரு­வா­னதில் அர்த்­த­மற்­ற­தென்றே கூற­வேண்டும். அதேபோல் இப்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 19 ஆவது திருத்­தச்­சட்டம் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் நிறை­வேற்­றப்­ப­டு­வதில் சந்­தே­கமே. ஏனெனில் இப்­போதும் 19ஐ தடுக்கும் சதித்­திட்டம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் விசு­வா­சிகள் தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்தி 19வது திருத்தச் சட்­டத்­தினை தடுக்க எடுக்கும் முயற்­சிகள் வெற்­றி­க­ர­மா­கவே செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் 19 ஆவத திருத்தம் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் நிறை­வேற்­றப்­ப­டு­வதில் எமக்கு நம்­பிக்கை இல்லை. எனவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உட­ன­டி­யாக தலை­யிட்­டேனும் 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை நிறை­வேற்­று­வதில் முயற்சிக்க வேண்டும். இந்த அரசாங்கம் உறுவாகியது மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதார சுமைகளை குறைக்கவும் என்பதையும் தாண்டி நள்ளாட்சியினை உறுவாக்கவும் என்பதை மறந்து விடக்கூடாது எனவும் அவர் தொிவித்தார்.
Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :