Featured Home (TOP)

Recent Comments

Wednesday, April 8, 2015

Unknown

'கால்வாய் வெட்டியவன் நான்; தண்ணீர் குடிப்பது வேறு ஒருவர் ' பாரா­ளு­மன்­றத்தில் ஹுனைஸ் பாரூக் ஆதங்கம்

உயிரைப் பணயம் வைத்து நல்­லாட்­சிக்கு வழி­ச­மைத்தோம். யார் யாரை­யெல்லாம் தூக்­கி­யெ­றிய வேண்­டு­மென்று மக்கள் நினைத்­தார்­களோ அவர்கள் இன்­றைய தேசிய அர­சாங்கத்தின் நல்­லாட்­சியில் அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றனர். கால்வாய் வெட்­டி­யவன் நான். ஆனால் தண்ணீர் குடிப்­பதோ வேறு ஒருவர் என்று ஆளுங்­கட்சி எம்.பியான ஹுனைஸ் பாரூக்   பாரா­ளு­மன்­றத்தில் ஆதங்கம் வெளி­யிட்டார்.
எவ்­வ­ளவு விரை­வாக இப்­பா­ரா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடி­யுமோ அவ்­வ­ளவு விரை­வாக கலைத்து தேர்தல் நடத்தி நேர்­மை­யா­ன­வர்கள் தெரிந்­தெ­டுக்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் அவ்­வா­றா­ன­வர்­க­ளையே அமைச்­சர்­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட வேண்­டுமே தவிர மோச­டி­யி­னர்­களை அல்ல என்றும் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில்   இடம்­பெற்ற உள்­நாட்டு திறை சேரி உண்­டியல் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் தீர்­மா­னங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
ஹுனைஸ் பாரூக் எம்.பி இங்கு மேலும் கூறு­கையில், நல்­லாட்சி ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் உயிரைப் பணயம் வைத்து உழைத்தோம். இதற்­காக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி முத­லா­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைந்து கொண்ட முஸ்லிம் உறுப்­பி­ன­ராக இருக்­கின்றேன்.
82 நாட்கள் கடந்­துள்ள இந்­நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பாரா­ளு­மன்­றத்தில் ஐந்து தட­வை­க­ளாக இங்கு ஆசன மாற்றம் ஏற்­பட்டு விட்­டது. இங்கு ஆச­னங்­களைத் தேடி சங்­கீ­தக்­க­திரை ஓட வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
-VK-

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :