Featured Home (TOP)

Recent Comments

Wednesday, May 27, 2015

Unknown

எதிர்க்கட்சிகள் பலமிருந்தால் பாராளுமன்றத்தை கலைத்துக்காட்டட்டும் : ரவி கரு­ணா­நா­யக்க

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­து­வ­தற்கே எதிர்க்­கட்­சிகள் முயற்­சிக்­கின்­றன. அவ்­வா­றாயின் எதிர்க்­கட்­சிக்கு முடி­யு­மாக இருந்தால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்துக் காட்­டு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சவால் விடுத்தார்.

இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது. நிரந்­த­ரமான அர­சாங்­க­மொன்றை நிறு­வு­வ­தற்கு புதிய பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அத­னூ­டாக திரு­டர்­களின் உண்­மைகள் வெளிவரும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
எமக்கு ஆட்­சியை ஒப்­ப­டை­யுங்கள். பாரா­ளு­மன்­றத்தை நாம் கலைத்துக் காட்­டுவோம் என்று தினேஷ் குண­வர்­தன எம்.பி.விடுத்த சவால் தொடர்பில் வின­விய போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
சிறுப்­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை கொண்ட ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஆட்சி அமைக்க அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை. ஆகவே ஆட்­சிப்­பீ­டத்தை எமக்கு வழங்­கினால் நாம் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து காட்­டுவோம் என முன்னாள் அமைச்சர் தினேஷ் குண­வர்­தன சவால் விடுத்­தி­ருந்தார். அத்­தோடு இது தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம­ஜ­யந்த ஜனா­தி­ப­திக்கு கடி­தமும் அனுப்­பி­யுள்ளார்.
பாரா­ளு­மன்­றத்தை கலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­து­டனே இவ்­வாறு எதிர்க்­கட்­சிகள் செயற்படுகின்றன. எதிர்க்­கட்­சி­களின் இத்­த­கைய செயற்­பா­டு­க­ளினால் எம்மை அச்­சு­றுத்த முடி­யாது. எதிர்க்­கட்­சி­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை கலைத்­து­விட்டு ஆட்­சியை பிடிப்­பதே பிர­தான குறிக்­கோ­ளாக இருப்பின் தினேஷ் குண­வர்­த­ன­வினால் விடுக்­கப்­பட்ட சவா­லுக்கு அமை­வாக முடி­யு­மனால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து காட்­டுங்கள்.
அவ்­வாறு கலைப்­ப­தி­னூ­டாக நிரந்­த­ர­மான ஆட்­சியை நாட்டு மக்­களால் உரு­வாக்க முடியும். அத­னூ­டாக மக்­களின் உடை­மை­களை சூரை­யா­டிய திரு­டர்கள் வௌிச்­சத்­துக்கு கொண்டு வர முடியும். இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது. நிரந்­த­மான அர­சாங்­க­மொன்றை நிறு­வு­வ­தற்கு புதிய பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட வேண்டும்.
அது மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்றம் கலைப்­ப­தி­னூ­டாக எதிர்க்­கட்­சியின் திருட்­டுத்­த­ன­மான செயற்­பா­டுகள் முடி­வுக்கு வரும். அத்­தோடு தேர்­த­லி­னூ­டாக மக்களின் ஆணை யார் பக்கம் உள்ளது என்பதும் தெரியவரும். அதன் பின்னர் எதிர்க்கட்சிகளில் வீண் விளையாட்டுக்கள் முடிவுக்கு வரும். எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்றார்.

Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :