Featured Home (TOP)

Recent Comments

Wednesday, May 27, 2015

Unknown

முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவும் : MCSL ஜனாதிபதிக்கு கடிதம்


அரசியலமைப்பு சபைக்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள 125 முஸ்லிம் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் கவுன்சில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்,எம். அமீன் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையின் முக்கிய உறுப்பினர்கள் நால்வர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும்,பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவும், சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுயாதீன அமைப்புக்களைச் சேர்ந்த மேலும் மூன்று உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபைக்கு உள்வாங்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(ஶ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்)



(ஜுனைட்.எம்.பஹ்த்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :