ஊடகவியலாளர்களின் நலன்புரிக்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான விசேட வீட்டுத்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது என ஊடக மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர கயந்த கருணாதிலக்க நேற்று (25) தெரிவித்தார்.
ஹோமாகம- தியகம- மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிற்கு அண்மையில் உள்ள இலங்கை ஒளிபரப்புக்குட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் காணியிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வீடமைப்புத் திட்டம் இன்று (26) தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் 1000- 1500 வீடுகள் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது நேற்று (25) அப்பிரதேசத்தை பார்வையிட சென்றபோது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தனியார் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வீட்டுத்திட்டத்தில் சலுகை விலையில்- இலகு தவணை முறையில் செலுத்தும் வகையில் இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
ஊடக சுதந்திரம் மட்டுமன்றி- சுதந்திரமான மனநிலையில் ஊடகவியலாளர்கள் சேவையாற்றும் வகையில் நல்லாட்சியுடன் அரசு செயற்படுவதாகவும் வரலாற்றில் முதற்தடவையாக ஊடகவியலாளர்களுக்காக பாரிய நலன்புரி வேலை திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்- ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன- அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்ஷனீ குணதிலக்க- இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் நந்த முருத்தெட்டுவேகம உட்ப பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
newsfirst
