பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், 10 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தேரர்,கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில், ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
