Featured Home (TOP)

Recent Comments

Saturday, May 2, 2015

Unknown

பல்லாயிரக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் பார்வையிட ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் காத்தான்குடியில் வெற்றிவாகை சூடிக் கொண்டது.


(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு இடம் பெற்ற மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி (01.05.2015 வெள்ளி) மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது இதில் ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடிக் கொண்டது.

காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் மே தினத்தில் மோதின இதில்  4-0 என்ற கோல்கணக்கில் ஏறாவர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.


தேசிய பாடசாலையின் கெப்டன் யு.எல்.எம்.முபாறக் தலைமையில் இடம் பெற்ற இக்கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஜ.சேகுஅலி கலந்து கொண்டார்.

அதிதிகளாக முன்னால் அரச அதிபர் ஜனைதா சரீப், மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆதம்லெப்பை, காத்தான்குடி கால் பந்தாட்ட லீக்கின் உப தலைவர் என்.எம்.ஸாஹிர் உப்பட பாடசாலைகளின் விளையாட்டு ஆசிரியர்கள், கழகங்களுடைய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மிக நீண்ட நாட்களின் பின்னர் பல்லாயிரக்கணக்கான உதை பந்தாட்ட ரசிகர்கள் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் மேற்படி கால்பந்தாட்ட போட்டியினை கான வந்திருந்ததினை காணக் கூடியதாக இருந்தது.

போட்டியின் போது வெற்றி பெற்ற ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் 10000/ பத்தாயிரம் ரூபாய் பணத்தினை பரிசாக பெற்றுக் கொண்டது.

இடன்டாம் இடத்தினை அடைந்ந காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகம் 7000/=  ரூபாய் பணத்தினை பரிசாக பெற்றுக் கொண்டது

மேற்படி நிகழ்வு காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி) இன் அனுசரனையுடன் இடம் பெற்றதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.










Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :