நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வும் தொழிலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.05.2015) அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
NFGGயின் காத்தான்குடி பிரதேச செயற்குழு செயலாளர் SMM.பசீர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MHAM.மிஹ்ழார், NFGGயின் பிராந்திய செயற்குழு அமீர் MMM.ஜனூப், முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன் மற்றும் ஐ.தே.க. காத்தான்குடி அமைப்பாளர் HMM.முஸ்தபா, ALA.கையூம் ஆசிரியர், சமுர்த்தி வீடமைப்புப் பிரதியமைச்சரின் காத்தான்குடி இணைப்புச் செயலாளர் அல்ஹாஜ் AJM.மாஹிர் உட்பட உலமாக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அரச மற்றும் தனியார் துறை தொழிலாளர்களைக் கௌரவிக்கும் வகையில் உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.