Featured Home (TOP)

Recent Comments

Friday, June 5, 2015

Unknown

காத்தான்குடியின் சமகால அரசியல்...! ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் விழிப்பூட்டும் பிரசுரம். அங்கம் 03 -

தொடா் -03


2011ம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் தலைவராகவோ, உப தலைவராகவோ, உறுப்பினராகவோ தெரிவாகலாம் எனப் பேராசைப்பட்டு தான் வகித்து வந்த பள்ளிவாசல் தலைவர் பதவியையும் இராஜினாமாச் செய்து ஒரு வேட்பாளராகக் களமிறங்கிய இந்த சுபைர் CC, இறுதியில் ஒரு உறுப்பினராகக் கூட வர முடியாமல் படுகேவலமாகத் தோற்றுப் போய் நடு வீதியில் தனியாளாக நின்றார்.
மீண்டும் எந்த வழியிலாவது ஊருக்குள் இவர் தலையெடுக்க வேண்டுமென்றால் இவருக்கிருந்த ஒரே வழி, முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு எப்படியாவது மீண்டும் தலைவராக வேண்டும் என்பதுதான்.
அதற்காக அப்பள்ளிவாசல் மஹல்லாவாசிகள், ஜமாஅத்தார்களினது விருப்பத்திற்கும், கோரிக்கைகளுக்கும் மாறாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாகவும், கள்ளத்தனமாகவும் பள்ளிவாசலுக்குத் தலைவராகி, அதன் மூலமே மீண்டும் சம்மேளனத்திற்கும் தலைவராகி இன்று ஊருக்குள் மறுபடியும் ‘தான்தோன்றித் தலைவராக’ தலையெடுத்திருக்கின்ற வரலாறை மக்கள் மறந்து விடக்கூடாது. இது இவருக்கு அழகா? பெருமையா??
இந்த நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் கடந்த 15.04.2015 அன்று நகர சபையின் தவிசாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை 17.04.2015ம் திகதி வெள்ளிக்கிழமை சகல ஜும்ஆப்பள்ளிவாசல்களிலும் வாசிக்குமாறு கையளிக்கப்பட்டிருந்தது.

முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கும் அவ்வாறே அன்று காலை 09:45க்கு அக்கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது.
எனினும், அப்பள்ளிவாசலின் தான்தோன்றித் தலைவரான சுபைர் CCயும், செயலாளர் அனீஸ் அகமதும் உரிய நேரத்தில் அக்கடிதம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறி அன்றைய ஜும்ஆவில் அதனை வாசிக்காமல் இருட்டடிப்புச் செய்து இந்த உருவச் சிலைகளை ஊருக்குள் பாதுகாக்கும் வேலையில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கொடுத்துள்ளனர் என்பதையும் நாம் இவ்விடத்தில் பகிரங்கப்படுத்திக் கூற வேண்டியுள்ளது.

சம்மேளத்தில் கையளிக்கப்பட்ட எமது கடிதம் அதன் தலைவர் சுபைர் CC மூலமாக மறுநாளே வெளியில் கொண்டு செல்லப்பட்டதன் காரணமாகத்தான், அன்று வரையிலும் தூங்கிக் கொண்டும், ‘பூனைக்கு மணி கட்டுவது யார்?’ என்ற கேள்வியுடன் பலரின் முணுமுணுப்பாகவும், ஊர்மக்களின் உள்ளக்குமுறலாகவும் இருந்து வந்த இந்தநூதனசாலை உருவச்சிலை விவகாரம்’, மீண்டும் அவசர அவசரமாக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினரின் கவனத்தை ஈர்த்து, கடந்த 15ம் திகதி நடைபெற்ற நகர சபை நிகழ்வில் அவரை அதுபற்றிப் பேசவும் வைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
காரணம், அவருக்கு எமது ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் மக்கள் பலம், துணிவு, வெளிப்படையாகவே ஈமானிய உணர்வை வெளிக்காட்டிப் போராடும் பண்பு என்பன பற்றி மிக நன்றாகவே தெரியும்.
சுபைர் CCயின் கடிதக் கடத்தலும், ஹிஸ்புல்லாவின் உரையும் ஒரு பக்கமிருக்க, ஜம்இய்யாவில் இடம்பெற்ற கடிதத் திருட்டு பற்றியும் நாம் இங்கு விவரித்தாக வேண்டும்.
எமது ஒன்றியத்தின் இரண்டு உறுப்பினர்கள் ஜம்இய்யாவின் தபால் பெட்டிக்குள் கடிதத்தை இட்டது பற்றி நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம். இதனடிப்படையில் பூட்டப்பட்டிருந்த ஜம்இய்யா அலுவலக தபால் பெட்டியினுள் நாம் கடிதத்தை இட்ட விடயம் எமது ஒன்றியத்தின் மேற்படி உறுப்பினர்கள் இருவருக்கு மாத்திரமே தெரியும். வேறு எவருக்கும் தெரிந்திருக்க முடியாது.
இந்நிலையில், தபால் பெட்டிக்குள் செலுத்தப்பட்ட கடிதத்தைக் காணவில்லை என ஜம்இய்யா தரப்பினர் கூறியது எமக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
அப்படியானால் இக்கடிதத்தை ஜம்இய்யாவின் கதவையும், தபால் பெட்டியையும் திறந்து திருடியது யார்? சங்கைக்குரிய உலமாக்களைத் தவிர வேறு நபர்களும் ஜம்இய்யா அலுவலகத்தினுள் திறந்த வீட்டிற்குள் ஏதோவொன்று போய் வருவது போல’ போக்குவரத்துச் செய்யும் நடைமுறையும் அங்கு இருக்கிறதா? என்பன போன்ற வினாக்களும் எமக்குள் எழுந்திருக்கின்றன.
எமது கடிதம் கிடைக்கவில்லை என அறிந்ததும் நாம் மற்றுமொரு கடிதத்தை உத்தியோகபூர்வமாக ஜம்இய்யாவின் செயலாளர் மௌலவி .ஜீ.எம். ஜலீல் மதனி அவர்களிடம் மறுதினம் 11ம் திகதி கையளித்தோம்.
அவர்களும் நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் எந்தவிதமான பதில்களையும் தராமல், ஜம்இய்யாவின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி .எம். அப்துல்காதர் (பலாஹி) அவர்கள் உம்ராவுக்குச் சென்றுள்ளதாகவும், அவர் 15ம் திகதி ஊருக்கு வந்த பின்னரே எமது கடிதம் குறித்து ஆராயப்படும் எனக் கூறிய தகவலும் கிடைத்தது.
அப்படியானால் ஜம்இய்யாவின் தலைவர் ஊரில் இல்லாமல் போனால் அந்தச் சபை அவர் வரும் வரைக்கும் அப்படியே செயலிழந்து போவதா?
அவர் ஊர் திரும்புகின்ற வரையில் மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து விசாரிக்க, நடவடிக்கை எடுக்க, தீர்ப்பு வழங்க தலையும், மூளையும் உள்ள ஆட்கள் எவரும் அங்கு இல்லையா?
அவ்வாறானால் ஏன் ஆயுட்காலத் தலைவர் ஒருவரையும், உப தலைவர்கள் இருவரையும், தலைவர் தவிர ஏனைய பதவிகளுக்கு நிர்வாகிகளையும், 27 உலமாக்கள் கொண்ட பலாஹிக்கள், மதனிக்கள், மக்கீக்கள், நளீமிக்கள், றஷாதிக்கள், ஹாஷிமிக்கள் போன்றவர்களையும், ஆலோசகர்களாக மௌலவிகளான எஸ்.எம். அலியார் (பலாஹி), .எம். அலியார் (றியாதி), எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), எம்.. அப்துல் கையூம் (ஷர்க்கி), ரி.எம்.எம். அன்ஸார் (நளீமி) போன்றோரையும் நியமித்து ஊருக்கும், உலகத்திற்கும்சோபனாகாட்ட வேண்டும்?
இவர்கள் எல்லோரும் எம்மைப்போன்று வியாபாரத்திலும், விவசாயத்திலும், மீன்பிடியிலும் ஈடுபடுகின்ற சாதாரணமானவர்களா?
இவர்களின் பெயர்களுக்குப் பின்னால் JP, BA, MA, SLASஎன்றெல்லாம் ஆங்கில எழுத்துக்களிலான பெரும் பட்டங்களும், பதவிகளும் குறிப்பிடப்படுகின்றனவே, இப்பேர்ப்பட்ட ஊர்மெச்சும் புத்திஜீவிகளால் எமது இரு பக்கக் கடிதத்தைப் படித்து, விளங்கி, ஆராய்ந்து ஒரு நீதியான நேர்மையான தீர்வைச் சொல்ல முடியாத அளவுக்கு இவர்களின் ஆளுமைகள் எல்லாம் மட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றனவா?
இவர்களையெல்லாம் சாவி போட்டு இயக்குவதற்கு ஜம்இய்யாவின் தலைவர்தான் சபையில் சமூகமளித்திருக்க வேண்டுமா?
இவ்வாறான கேள்விகளுடன் நாம் இருக்கையில், கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஜம்இய்யாவின் கூட்டம் அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதன்போது எமது கடிதம் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை. மாறாக, அங்கு சமூகமளித்திருந்த ஜம்இய்யாவின் நிர்வாக சபை உறுப்பினரான மௌலவி ஒருவர் ஒரு பிரேரணையை முதன்மைப்படுத்தி முன்மொழிந்தாராம்.

15ம் திகதி நடைபெற்ற நகர சபை விழாவில் உரையாற்றிய ஹிஸ்புல்லா, இப்பிரதேசத்தின் மூத்த உலமாவான ஆதம்லெப்பை ஹஸ்ரத் அவர்களைப் பெயர் குறிப்பிட்டு விமர்சித்தமைக்கு ஜம்இய்யாவின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதே அவரது பிரேரணையாக இருந்ததாகவும், அதனை அங்கிருந்த உலமாக்கள் யாவரும் வரவேற்று ஆமோதித்ததாகவும் தெரிய வருகிறது.

தொடரும்..

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :