ஊடகவியலாளர்களின் நலனுக்காக பல்வேறு விடயங்களை முன்னெடுக்கும் அரசின் திட்டத்திற்கமைய ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்றுகாலை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
தகவல்களை முழுமையாக அறிந்துகொண்ட பின்னர் விண்ணப்பங்களை ஊடக அமைச்சில் பெற்றுக்கொள்ளலாம். இலங்கை பிரஜையாக இருத்தல்- 5 வருட அனுபவம்- அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை வைத்திருத்தல் என்பனவே விண்ணப்பிப்பதற்கான தகமைகளாக கொள்ளப்படுகின்றன. சுதந்திர ஊடகவியலாளர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
