100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு 10 இலட்சம் ரூபாய் என்ற வேலைத் திட்டமானது காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வேலைத்திட்டம் என்ற வகையில் 18 வேலைத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ் வேலைத் திட்டங்களானது முன்னைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் தீர்மானித்து அமுல்படுத்துகின்ற சுயலாப அபிவிருத்திற்கு அப்பால் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லாட்சியின் கீழ் மக்களிடம் கேட்டறிந்து மக்களுடைய விருப்பத்திற்கு இணங்கவும் செலவு செய்யப்படுகின்ற பொதுப் பணம் என்பது விரயமில்லாமல் மக்களுடைய தேவையை நூறு வீதம் திருப்தி அடைய செய்யும் விதத்தில் முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டங்களானது மக்களால் தீர்மானிக்கப்பட்டு அவ் வேலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.
இது நல்லாட்சிக்காக பாடுபட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாகும், இந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் 9 வீதி செப்பனிடும் வேலைகள், 3 பலநோக்கு கட்டிடங்கள், 4 வடிகான் அமைப்பு மற்றும் வடிகான்களுக்கு மூடியிடும் வேலைகள், 2 பொது மயானங்களை துப்பரவு செய்து அழகுபடுத்துகின்ற வேலைத்திட்டங்கள் என 18 வேலைத்திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
செயற்படுத்தப்படுகின்ற இவ் வேலைத்திட்டங்கள் அதியுயர் தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களை இவ்வாறான வேலைத்திட்டங்களில் தங்களை நுழைவித்து இது சம்பந்தமான விழிப்பூட்டல்களை பெறவேண்டும் என்பதற்காகவும் நேற்று வியாழக்கிழமை (25.06.2015) நடைபெற்ற 18 வேலைத் தளங்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விஜயம் செய்து நேரடியாக வேலைகளை பார்வையிட்டார. இதன் மூலம் சிறந்த பயனுள்ள பெருபேருகளை எதிர்காலத்தில் அடைய முடியும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )




