Featured Home (TOP)

Recent Comments

Friday, June 26, 2015

Unknown

20 நிறைவேறிய பின்னரே பாராளுமன்றம் கலைப்பு அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித அறிவிப்பு

தேர்தல் முறை­ மாற்றம் தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறை­வே­றிய பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். யாரு­டைய தேவைக்­கா­கவும் நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயார் இல்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

20 ஆவது திருத்தம் தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சிகள் முரண்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை. யார் எதிர்த்­தாலும் அதனை நிறை­வேற்­றியே தீருவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
வாராந்த அமைச்­ச­ரவை முடிவு களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது;
பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வதை அனை­வரும் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட முன்னர் சில முக்­கிய வேலைத்­திட்­டங்­களை நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது. ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த நாம் மிகவும் போரா­டினோம். எமது உயிர்­களை பணயம் வைத்து மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­தினோம். அதன் பின்னர் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைப்­பது தொடர்பில் நாம் தீர்­மானம் எடுத்து அதை செய்து முடித்­துள்ளோம்.

அதேபோல் நாம் தீர்­மா­னித்த இரண்­டா­வது முக்­கிய விட­ய­மான தேர்தல் முறைமை மாற்­றத்­தையும் நிறை­வேற்ற வேண்டும். தேர்தல் முறைமை மாற்றம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் கடந்த காலத்தில் இருந்து பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் முன்­னைய எந்த அர­சாங்­கமும் தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வருவதற்கு விரும்­ப­வில்லை.

ஆனால் எமது ஆட்­சி­யி­லா­வது சரி­யான மாற்றம் ஒன்றை கொண்­டு­வந்து நாட்டின் அர­சியல் பாதையில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­விட வேண்டும். எனவே தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை கலைப்பார். எப்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என்­பது சரி­யாக குறிப்­பிட முடி­யாது.

கேள்வி :-எனினும் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சிகள் அதிருப்­தியில் உள்­ள­னவே ?

பதில் தேர்தல் திருத்தம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். அதை நாம் நிரா­க­ரிக்­க­வில்லை. ஆனால் இன்று தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் முரண்­படும் எவரும் சிறு­பான்மை மற்றும் கொள்­கை­வா­தி­களின் தலை­வர்கள் அல்ல. வெறு­மனே கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனை­வ­ரையும் தலை­வர்கள் என்ற வட்­டத்­துக்குள் கொண்­டு­வந்­து­விட வேண்டாம்.
தேர்தல் திருத்தம் தொடர்பில் யோச­னை­களை முன்­வைத்த போது அனை­வ­ரதுகருத்­துக்­க­ளையும் நாம் வின­வினோம். நாம் முன்­வைத்த யோச­னைக்கு மாறாக மற்­றைய யோச­னை­க­ளையும் கேட்டோம். மாற்றுக் கருத்­து­களை முன்­வைத்தால் மட்­டுமே சரி­யான தீர்­மானம் எடுக்க முடியும். ஆனால் மாற்றம் ஒன்றை விரும்பும் இவர்கள் அதற்­கான யோச­னை­யினை முன்­வைக்க தயா­ராக இல்லை. இப்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்கும் தேர்தல் திருத்தச் சட்­ட­ மூலமானது ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இதுவே சாத­க­மான தீர்­மா­ன­மாகும்.

கேள்வி :- எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் உங்­க­ளது தீமா­னத்தை ஆத­ரிக்­க­வில்­லையே ?

பதில் :- அப்­படி வெளிப்­ப­டை­யாக கூற முடி­யாது. ஆரம்­பத்தில் அவர்கள் முரண்­பட்­டாலும் பின்னர் இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் அவர்­க­ளது ஆத­ரவை தெரி­விக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். அமைச்­சர்­க­ளது ஆத­ர­வுடன் தான் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுத்து வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­ப­டது. ஆகவே ஐக்­கிய தேசியக் கட்சி 20ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு எதிப்பு என்று ஆணித்­த­ர­மாக கூற முடி­யாது.

கேள்வி :-பாரா­ளு­மன்­றத்தில் 20க்கு எதிர்ப்பு வரு­மாயின் ?

பதில் :- அதைப்­பற்றி நாம் கவ­லைப்­ப­ட­வில்லை. 19அவது திருத்தச் சட்டம் கொண்­டு­வந்த போது முந்­திக்­கொண்டு வாக்­க­ளித்­த­வர்கள் ஏன் 20ஐ கொண்­டு­வ­ரு­வதில் பின்­நிற்­கின்­றனர். ஏனெனில் 19 ஆவது திருத்தும் வேறு ஒரு தனி நப­ரது அதி­கா­ரத்தை மட்­டுமே பறிக்­கின்­றது. ஜனா­தி­ப­தியின் அதிகாரங்களை குறைப்பதை அனை­வரும் விரும்­பு­வார்கள். ஆனால் 20ஆம் திருத்தச் சட்­டத்தின் மூலம் தத்­த­மது பலம் குறையும் நிலைமை வந்­ததும் அதை எதிர்க்­கின்­றனர்.

எனவே இதை எதிர்க்கும் அனை­வரும் சுய­ந­ல­வாத அர­சி­யல்­வா­தி­க­ளே­யாவர். இவர்­களால் மக்­க­ளுக்கு எந்தப் பயனும் இல்லை. 20ஐ கொண்­டு­வ­ரு­வதால் அவர்­க­ளுக்கு மட்டும் அல்ல எமக்கும் பாதிப்பு உள்­ளது. ஆனால் இப்­போது தனி நபர்­க­ளது சுய­ந­லத்தை கவ­னத்தில் கொள்­ளாது சரி­யான மற்­றதை ஏற்­ப­டுத்த வேண்டும். இந்த விட­யத்தில் சிறு­பான்மை கட்­சிகள் மட்டும் அல்ல ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்த்­தாலும் அதைப்­பற்றி நாம் கவ­னத்தில் கொள்­ளப்­போ­வ­தில்லை. நாம் பாரா­ளு­மன்­றத்தில் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்றிக் காட்­டுவோம்.

கேள்வி :- ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றவே 20 கொண்­டு­வ­ரு­வ­தாக சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் குற்றம் சுமத்­து­கின்­றனவே?

பதில் :- எமது கட்­சியின் பலத்தை அதி­க­ரிக்க மட்­டுமே தேர்தல் முறைமை மாற்றம் கொண்டு வரு­வ­தாயின் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்சிகள் ஏன் அன்று எம்முடன் கைகோர்த்தார்கள். ஜனாதிபதித் தேர்தலின்போது பிரதான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே நாம் களத்தில் இறங்கினோம். அவ்வாறு இருக்கையில் இன்று 20ஐ எதிர்க்கும் அனைவரும் அன்று எதற்காக எம்முடன் கைகோர்த்தனர். நாம் வாக்குறுதி கொடுத்ததை இன்று செய்து வருகின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :