Featured Home (TOP)

Recent Comments

Saturday, June 6, 2015

Unknown

காத்தான்குடி அமானா கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2015ஆம் ஆண்டிக்கான பாலர் விளையாட்டு விழா காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

ஏ.எல்.டீன்பைருஸ்

காத்தான்குடி அமானா கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2015ஆம் ஆண்டிக்கான பாலர் விளையாட்டு விழா (5.06.215 வெள்ளிக்கிழமை பி.ப.02.00) காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் அதன் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ஐ.எம்.அன்வர் (ஆசிரியர்) தலைமையில் இடம் பெற்றது பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற பாலர் பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் இலங்கை திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி. ஆர். சீனிவாசன் கலந்து கொண்டார்.

 மேற்படி நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை)அதிபர் யு.எல்.ஏ.கபுர்இ மின் அதிதியட்சகர் ஏ.எல்.எம்.மாஹிர்இ மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபுர்இ காத்தான்குடி மீடியா பேரத்தின் முன்னால் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா(பலாஹி)காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அல்ஹாஜ் ஏ.எம்.அப்துல்காதர்(பலாஹி) அன்வர் வித்தியாலய அதிபர் என்.எம்.எம்.நியாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.u




சுமார் 17 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி அமானா கிட்ஸ் பாலர் பாடசாலையானது தற்போது  190 மாணவர்கள் 15 ஆசிரியைகளுடன் இருப்பதானது பாடசாலையின் சிறப்பை கல்வி நடவடிக்கையின் முன்னேற்றத்தை அறிய முடிகின்றது.
காத்தான்குடியில் உள்ள ஏனைய பாடசாலைகளும் இவ்வாற தரத்தில் தங்களின் பாடசாலையினை கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என பிரதம அதிதியாக கலந்து கொண்ட  திருமதி. ஆர். சீனிவாசன் தனதுரையில் குறிப்பட்டார்.

காத்தான்குடி அமானா கிட்ஸ் பாலர் பாடசாலையின் வெற்றிக்குப் பின்னால்  தனது மனைவியின் பாரிய பங்களிப்பு அதிகம் இருப்பதாக பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ஐ.எம்.அன்வர் ஆசிரியர் தனது தலைமை உரையின் போது குறிப்பட்டார்.

இறுதியாக சாதனை படைத்த மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டமுடன் நிகழ்வு சிறப்புடன் நிறைவுற்றது.






Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :