Featured Home (TOP)

Recent Comments

Wednesday, June 24, 2015

Unknown

காத்தான்குடி பெரிய தோணா தற்காலிகமாக துப்பரவு செய்யப்பட்டது..


காத்தான்குடியில் மழை காலங்களில் நீர் வடிந்தோடக் கூடிய பெரிய தோனா நீர்,வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதென்பது பாரிய ஓர் சவாலாக இருந்து வருகின்றது.

சீரற்ற ஒழுங்கின் காரணமாக நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதானால் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற நிலைமையும், மழை காலம் அல்லாத காலங்களில் தேங்கி நிற்கும் நீரின் காரணமாக நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டு நோய் பரவக்கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது.

இந்த பெரிய தோணாவினை நல்ல முறையில் அமைத்து, நீர் ஓடக்கூடிய வகையில் செப்பனிடப்படக்கூடிய தேவை காணப்பட்ட போதிலும், இவ்வளவு காலமும் அது புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இருந்த போதிலும் எதிர்காலத்தில் இதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக இந்த பெரிய தோணாவை துப்பரவு செய்கின்ற பணி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டது.

(ஜுனைட்.எம்.பஹ்த்)





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :