நேற்று (27) மாலை ரமழான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வொன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜக்கிய அராபு இராச்சியத்தின் இலங்கை தூதரகம் (embassy of the united Arab emirates ) இன் அனுசரணையல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியளார் சிப்லி பாரூக் அவர்களின் ஏற்பாட்டில் இவ் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
காத்தான்குடியின் சகல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ் இப்தார் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், முன்னால் மாகாண சபை உறுப்பினர் முபீன் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் என்று பலரும் கலந்து சிறப்பிதமை
குறிப்பிடத்தக்கது.
(ஜுனைட்.எம்.பஹ்த் )


