Featured Home (TOP)

Recent Comments

Sunday, June 28, 2015

Unknown

ஆகக் குறைந்த மலிவு விலையில்

(எம்.எல்.எம்.அன்ஸார்) 

எனது இரத்தத்தைப் பசளையாய்த் தின்று
கொழுத்து வளர்ந்த மரம்.
தண்ணீராய்
இனத்து வாக்குகளைப் பருகியதால்
செழித்தது பல கிளைகளாக!
தனது தியாகங்களை அணிவித்து
மானம் மரியாதையாக
சூடு சொரணையோடு மரத்தை வளர்த்து
நிழலை ஆய்ந்து தந்தார் மர்ஹூம் தலைவர்

-----

பச்சை நீலக் கட்டில்களில் ஏறி
உரியானத்தோடு உருண்டு புரண்டு
யானை வெற்றிலைகளோடு
படுத்தெழும்பி ஒழுக்கங்கெட்டலைகிறது
மானம் கெட்டவளைப்போல மரம்.
----

தேர்தல் வீசுகிற பருவ  ஆண்டுகளில்
போஸ்டர்  பெனர்களில்
தொப்பி முக்காடு  உடுத்துக் கொண்டு
மரம் வுளூச் செய்து குளித்து  துப்பரவாகி
ஊர்ச் சந்திகளில் வந்து நிற்பதுண்டு.
ஸக்காத்துக்குத் தயாராகி அலையும் உம்மத்தினர் போல
---

அழ்ழாஹ்வையும் அல்குர்ஆனையும்
ஒலிபெருக்கி பொருத்தி
சத்தமாகக் கூவி விற்பானுகள்
எம்பியாக பூத்து
பிலாக்காய் போல பெருத்து வளர பேராசைப்படுபவனுகள்
----

எனது குருதியில் சுடுநீர் கொட்டி  கொதிக்க வைக்கப்படுகிறது
பிரச்சார மேடைகளில்.
உணர்வுகளின் கால்களை உசுப்பிவிட்டு
வேகமாக ஓடச்செய்கிறார்கள்
வாக்குக் கொள்ளையை வசதியாய்ச் செய்து முடிக்க
---

செத்துத் தொலைந்து போய்விடக்கூடாதென்ற
சமூக அன்பின் வற்புறுத்தல்
ஒவ்வொரு தேர்தலின் போதும்
புள்ளடியைப் பருக்கி காப்பாற்றி எடுக்கிறது
வீட்டு மரத்தை.
----

வெற்றியின் பின்னரான நாட்களில்
எனது அரசியல் அடையாளம்
தனித்துவத்தின் பேரம் பேசும் வல்லமை
விற்கப்படுகிறது ஆகக் குறைந்த மலிவு விலையில்
நடை பாதையில்  விரித்து வைத்து
இருபது ரூபா பிளாஸ்டிக் சாமான்கள் போல
2011.02.25 தொடக்கம் 03.01 வரை


Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :