(பழீல் அப்துல் கபூர்)
பரீட் நகர், பாம் வீதி புனரமைப்புப் பணிகள் இன்று மாலை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களின் சொந்த நிதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ்வீதி புனரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் PSM.சார்ல்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான ஜெ.சர்வேஸ்வரன், காத்தான்குடி பிரதேச செயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வவெதகெதர, நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதேச சூறாசபை உறுப்பினர்களும் நகரசபை உறுப்பினர்களுமான SHபிர்தௌஸ் மற்றும் MAHM.மிஹ்ழார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.