(எம் எச் எம் அன்வர்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து புதிய காத்தான்குடி பாம் வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (14)இடம்பெற்றது.
6.2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இவ்வீதியானது நீண்ட காலமாக செப்பனிடப்படாமலும் இவ்வீதியால் போக்குவரத்து செய்பவர்கள் பெரும் சிரமத்தினையும் எதிர்நோக்கி வந்தனர்
மேற்படி வீதிக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவ்வீதியை கொந்தராத்து மற்றும் புணரமைப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கே பொறுப்பு என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பல தடவைகள் பல கூட்டங்களில் கூறியிருந்தார்
இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தனது சொந்த நிதியிலிருந்து இப்பணியை செய்வதாக இன்றைய நிகழ்வில் தெரிவித்ததுடன் ஸதக்கத்துல் ஜாரியாவாக இது அமையும் எனவும் தெரிவித்தார்
அத்துடன் இன்ஷா அல்லாஹ் இந்த பாம் வீதியானது எதிர்வரும் ரமழான் நோன்புப் பெருநாள் தினத்தன்று இப்புணரமைப்பச் செய்யப்பட்ட வீதியால் பயணித்து பெருநாள் தொழுகைக்கு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்தார்
மேற்படி நிகழ்வுக்கு மாவட்ட அரச அதிபர் பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெத கெதர நகர சபை விஷேட ஆணையாளர் திரு சர்வேஸ்வரன் கெபப உறுப்பினர்கள் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ழான் முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர் மதீன் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் மேற்படி அதிதிகளால் அடிக்கல் நட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.