Featured Home (TOP)

Recent Comments

Thursday, June 4, 2015

Unknown

பூசணிக்காய் எம்.பி. யிடம் இருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் ​

எமது பூசணிக்காய் எம்.பி. வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறி­சே­ன ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து வருகின்றார். எனவே அவரிடமிருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவரான ஜனாதிபதிமைத்திரிபால சிறி­சே­னவுக்கு எதிராக கட்சிக்குள் சூழ்ச்சிகள் தலைதூக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பூசணிக்காய் எம்.பிஜனாதிபதி ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டுமென்று இவருக்கு எதிரான பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதுபோன்று ஜனாதிபதிக்கு எதிராக அவர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். 63 இலட்சம் மக்களின் ஆதரவைப் பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்படுபவர்களிடமிருந்து நாம் ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும்.
virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :