Featured Home (TOP)

Recent Comments

Monday, June 15, 2015

Unknown

ஆசீர்வதிக்கப்பட்ட புத்தர்

இலங்கையின் தென் மாகானத்தின் அழுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தீவிரவாதிகள் நடாத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடந்து இன்றுடன் வருடம் ஒன்று பூர்த்தியாகிறது 
அதையொட்டி இந்தக்க விதை பிரசுரிக்கப்படுகிறது

(எம்.எம்.எம்.அன்ஸார்)

பெளத்த மதம் ஒன்று வாங்கி
வீட்டில் வளர்த்து  வருகிறேன்.
கொலை செய்வது கடை வீடுகளைக் கொளுத்துவது
போன்ற முக்கிய பாடங்களை
ஆசிரியராக வந்து போதிப்பதற்கு
அரச மரத்திற்கு சம்பளமும் கொடுக்கிறேன்

தினமும் 'பன்சல' வுக்குப் போய்
'பிரித்' வாங்கி வந்து சமைத்துக் கொடுக்கிறேன்.
சண்டித்தனமாக வளர்ந்து  மாற்று மதத்தினரை
நடுத்தெருவில் வைத்து
வீண் வம்புக்கு இழுத்து
வெட்டுக் குத்து நிகழ்த்துகிறது
என் வீட்டில் வளர்கின்ற பெளத்த மதம்  

பெளத்த மதத்தை
செல்லப் பிள்ளையாக தீன் போட்டு வளர்த்தால்
அந்த ஊரில்
மனித இறைச்சி வெட்டிப்போட்டு கொடுக்கின்ற
'தன்சல' விருந்துக்கு
முன் வரிசையில் வந்து நின்று
வேடிக்கை பார்த்து மகிழும் அரசாங்கம்.
அதனால் ஆசையாக வளர்க்கிறேன்

ஒவ்வொரு பொசன் போயா தினத்தன்றும்
என் வீர பெளத்த மதத்தை
மிஹிந்தலைக்கு அழைத்துச் சென்று
பயங்கரவாதத்தை பயிற்சி அளிக்கின்றேன்.
நீதி மன்றங்களால் கூட நிறுத்த முடியாத
கலவரங்களை
சட்டப்படி செய்துமுடித்து
என் பெயரைக் காப்பாற்றுகிறது.

மத வெறியைத் தின்று கொழுப்பதற்காக
ஞாயிற்றுக் கிழமைகளில் வெள்ளை ஆடை அணிவித்து
'தஹம் பாசல' வுக்கு அனுப்பி வைத்தேன்.
நல்ல பலன் கிடைத்தது.
போகின்ற வருகின்ற வழிகளில்
அப்பாவிகளாக தம் பாட்டுக்கு நின்ற
மஸ்ஜித் கோவில் தேவாலயங்கள் மீது
கல்லுகளையும் பொல்லுகளையும் வீசியெறிந்து
தன்னை பாதுகாத்துக் கொண்டதாக
வீரப் பெருமை கொண்டது
நான் தொழுவம் கட்டி வளர்த்த பெளத்த மதம்

கடைசியாக
கடும்பசி எடுத்தபோது எனது பெளத்த மதத்தை
அளுத்கமவில் கொண்டுபோய் அவிழ்த்துவிட்டேன்.
கடைகளை பிடுங்கிப் பிடுங்கித் தின்றது
வீடுகளை சாய்த்துச்  சாய்த்துச் சப்பியது
'பன' ஓதி மந்திரித்த தீயைக் கரைத்து
நகர் முழுக்க ஊற்றியது.
தாகத்திற்கு முஸ்லிம்களின் இரத்தத்தைக் குடித்துவிட்டு
தப்பியோடிச் சென்றுவிட்டது.

நான் வளர்த்து ஆளாக்கிய
பெளத்த மதத்தை தேடிச் சென்றேன்.
களுத்துறை மஹா போதியில்
பாதுகாப்பு அமைச்சினால் ஆசீர்வதிக்கப்பட்ட
பெரிய புத்தரின் மடியில்
வன்முறை நிகழ்த்திய பட்டியலை
பிக்குகளின் கரகோசத்தோடு
அது வாசித்துக் கொண்டிருந்தது.
மணிக்கட்டுக் கையில் வெள்ளை நூல் கட்டிய பொலிஸார்
காவலுக்கு நின்றனர்

15-06-2014











Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :