Featured Home (TOP)

Recent Comments

Friday, July 24, 2015

Unknown

கிழக்கு மாகாணத்தில் 10,87,776 பேர் வாக்களிக்கத் தகுதி!

2014 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இம் முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 10 இலட்சத்து 87 ஆயிரத்து 776 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 56 பேரும், மட்டக்களப்பில் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 499 பேரும், பட்டிருப்பில் 87 ஆயிரத்து 612 பேரும்
திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறையில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 999 பேரும், சம்மாந்துறையில் 60 ஆயிரத்து 357 பேரும், கல்முனையில் 71 ஆயிரத்து 254 பேரும் பொத்துவிலில் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 147 பேரும்
திருகோணமலை மாவட்டத்தில் சேருவிலவில் 74 ஆயிரத்து 70 பேரும் திருகோணமலையில் 86 ஆயிரத்து 978 பேரும் மூதூரில் 95 ஆயிரத்து 804 பேரும் தகுதி பெற்றுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :