ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் இன்று அதிகாலை நடந்த ஆட்டோ விபத்தில் - தாய் ஒருவர் மரணம் அடைந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புன்னைக்குடா வீதி வழியாக சென்ற ஆட்டோ வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மத்தியில் வைக்கப்பட்டிருந்த பூச்சட்டிகளில் மோதுண்டதில் ஏறாவூர் முன்னாள் ஏறாவூர் பிரதேச சபையின் தவிசாளரும் - தற்போதைய கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களின் இணைப்புச் செயலாளருமான அப்துல் நாசர் அவர்களின் தாய் மரணம் அடைந்ததுடன் மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(ஜுனைட்.எம்.பஹ்த் )


