Featured Home (TOP)

Recent Comments

Friday, July 24, 2015

Unknown

5 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் 2000ஆம் ஆண்டு 10 மாதம் 31ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடா்புடைய 5 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க 24.07.2015 இன்று மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார்.
2000ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலையுடன் தொடா்புடைய 8 பேர் குற்றாவாளிகளாக இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதில் 3 பேர் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
24.07.2015 அன்று ஆஜராகியிருந்த கிறேட்வெஸ்டன் தோட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன் வேலுப்பிள்ளை, பெருமாள் லெட்சுமன், பெருமாள் மயில்வாகனம், பெருமாள் பாகர், ராஜேந்திரன் குணசேகரன் ஆகிய ஜந்து பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டது.
மேற்படி சந்தேக நபா்கள் லிந்துலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள சுப்பையா மாரிமுத்து என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அடித்து கொலை செய்துள்ளனர்.
இதனாலேயே 5 சந்தேக நபா்களுக்கு மரணதண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :