வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது . எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேற்படி விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஐ.தே.கவின் மாநாட்டில் வைத்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை அறிவித்துள்ளார். மேலும் வெள்ளை அரிசி மற்றும் நாட்டரிசி கிலோ 69 ரூபாவாகவும் , சிவப்பரிசி 60 ரூபாவாகவும் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
