(மரியமின் புத்திரன்)
“அகர ஆயுதம்” கலை இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொதுவெளியின் ஏற்பாட்டில் இம்முறை ரமழான் விசேட ஏற்பாடாக “ரமழான் கவிப்பொழிவும், இப்தார் நிகழ்வும்” 2015-07-12ம் திகதி பி.பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் அல்/மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை (பிரதான ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் அருகில்) கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை, அம்பாறை பிரதம பொறியியலாளர் -கவிஞர் அல்ஹாஜ் தம்பிலெப்பை இஸ்மாயில்- தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் “ரமழான் சிறப்புச் சொற்பொழிவு”அஷ்ஷெய்ஹ் எம்-எச்-எம்-ஹரீஸ் (நளீமி) அவர்களால் நிகழ்த்தப்படும். உலமாக்கள் , புத்திஜீவிகள், துறைசார் அதிகாரிகள், இலக்கியவாதிகள், மாற்றுமதச் சகோதரர்கள், மாணவர்கள் ஆண்கள், பெண்கள் என கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் மூத்த இளம் கவிஞர்கள், கவிதாயினிகளால் ரமாழான் சிறப்புக் கவிப்பொழிவுகளும் இடம்பெறுவதைத் தொடர்ந்து அகர ஆயுத செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட இப்தார் நிகழ்வு இடம்பெறும் .
குறிப்பு – பெண்களுக்கு பிரத்தியேக இப்தார் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
