(எம்.எல்.எம். அன்ஸார்)
இலாபகரமான
முதலீடு
அரசியல்
கட்சி ஆரம்பித்து தொழில் செய்வது
!
எனதூர்
சொறி நாய்கள் கூட
உழைக்கத்
தயாராகிவிட்டன புதிய கட்சிகளை
பெருநாள்
கடைகள் போலத் திறந்து !
*
நாய்களுக்குப்
பேரானந்தம் நக்குவது !
சமூகத்தின்
மார்க்கத்தின் இனத்தின் பெயர்களை
செங்கற்கள்
போல அடுக்கி
ஊருக்கொரு
கட்சி
கட்டி
முடித்துக்கொள்ளுமிச் சொறி நாய்கள்
!
பேராசை
“தேசியத் தலைவர்”
“அமைச்சர்”
“முதலமைச்சர்”
கொம்பு
முளைத்து
முட்டித்திரிய வேண்டுமென்ற !
மூன்று
நான்கு அமைச்சு, வரிசையாய் வாகனங்கள்
அரசாங்க
நக்குத் தீன்கள், குளிரறைச் சுகங்களாகியவற்றை
துப்பனி
வழிய நக்குவதற்கென்றே
நாக்கைத்
தொங்கவிட்டுக் கொண்டலைகின்றன
!
*
பெரும்
பாதுகாப்பு
இடுப்பிலொரு
கட்சியை இடுக்கிக் கொள்ளுவது
!
வேசையோடு
நடுத்தெருவில் படுத்தெழும்பினாலும்
தேசியத்
தலைவராயிருந்தால் “பத்வா” வை
பொன்னாடை
போல அணிவித்து
புகழ்ந்து
வாழ்த்துவார்கள் !
சமூகத்தை
யானை வெற்றிலைக் கட்சிகளிடம்
பெரும்
விலைக்கு ஏலமிட்டு
மொத்தத்
தொகையையும் முழுசாகச் சுருட்டலாம்.
வாய்
பேசவே மாட்டார்கள்
தேசியப்
பட்டியலுக்கு காசு கட்டிக் காத்திருப்போர்
!
கள்ளன், காவாலி, பொண்பிடியன்களை
அதியுயர்
பீடத்திற்கு நியமித்தாலும்
ஆதரவுக்
குரல் தர
முண்டியடித்து
வருவார்கள் முதுகு சொறிவோர்
!
*
கழுதை
பன்றிகளை காசுகொடுத்து வாங்கி
சில
நாத்த நாய்கள்
பதவி
சேர்த்து கொண்டாடிக் குதிக்கின்றன !
முதலமைச்சர்
சுயாட்சி
தென்கிழக்கு
கரையோர
மாவட்டம்
தனித்தரப்பு
இவ்வவசியங்களை
மாங்காய்
தேங்காய் மண்ணாங்கட்டிபோல் பரப்பி வைத்து
வீதியோர
வியாபாரம் செய்வதற்கு
பொருத்தமானது
முஸ்லிம் கட்சிதான் !
*
மாகாணத்தின் பெயரில் சுயேட்சை கட்சி தொடங்கினால்
கூட்டு வியாபாரம் புரிந்து கொள்ளையாகச் சம்பாதிக்க இலகு !
படித்த எருமை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள
எம்பி ஆசை
!
அரசியல் கட்சி ஆரம்பிப்பது உண்மையில்
ஆதாயமான பங்குச் சந்தை வியாபாரம் !
*
உம்மா உலமா பெயரில் இன்றைக்கு !
முஸ்லிம் அரசியல் கட்சிகள் நாளை முளைக்கும்
கள்ளப் பொண்டாட்டிகளின் பெயர்களில் !
23-08-2004
