Featured Home (TOP)

Recent Comments

Sunday, July 19, 2015

Unknown

காத்தான்குடி கடற்கரை திடலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை தொடர்பான சில அவதானங்களும் திருத்தங்களும்

(எம்.எச்.எம்.அன்வர்)

அல்லாஹ்வின் அருளால் நேற்றைய தினம் இஸ்லாமிக் சென்றர் காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மிகச் சிறப்பாக இடம்பெற்றது இருப்பினும் சரியாக 6.15 க்கு இடம்பெறவிருந்த இந்த தொழுகை சற்று தாமதித்து அதாவது 10 நிமிடங்கள் கழித்தே ஆரம்பிக்கப்பட்டிருந்தும் பலருக்கு தொழுகை கிடைக்காமல் போனதையும் அவதானிக்க முடிந்தது

ஆயிரக்கணக்கான ஆண் பெண்கள் கலந்துகொண்ட இந்த ஈதுல் பித்ர் தொழுகைக்கு மௌலவி எம் எம் மன்சூர் மதனி அவர்களால் தொழுகை நடாத்தப்பட்டு குத்பாவும் இடம்பெற்றது இந்த குத்பாவில் புனித மக்காவில் சீயாக்களின் ஊடுருவல் அண்மையில் இடம்பெற்ற விதம் தொடர்பாகவும் அதனை சவுதி அரேபியா உள்ளிட்ட கூட்டுப்படைகள் முறியடித்த விதம் இதனால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட்ட அந்த செயல் பாராட்டத்தக்கது தொடர்பாக தெரிவித்ததுடன் ஒற்றுமைப்பட்ட முஸ்லிம் சமூகமாக மாறவேண்டிய தேவை இன்று உள்ளதாகவும் ஆனால் இன்று முஸ்லிம்கள்தான்  பாரியளவு பிரிந்து உலகத்தில் செயற்படுவதாகவும் குத்பாவின்போது தெரிவித்தார்

சில அவதானங்களும் திருத்தங்களும்

01; 6.15 மணியை சரியாக எதிர்பார்த்து தொழுகைக்கு வந்திருந்த நபர்கள் வாகன நெரிசலால் இடையில் தாமதாமாகியும் வருவதை காணமுடிந்தது இதற்கு தொண்டர்கள் ஆங்காங்கு போடப்பட்டபோதிலும் மோட்டார் சைக்கில்களும் ஆட்டோக்களும் இடையிடையே நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு தடையாக இவை அமைந்திருந்தன இறுதி நேரத்தில் ஓடோடி வந்து தொழுகையில் கலந்துகொண்டனர் இதை பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் 'விரைவாக செல்லுங்கள் ஆரம்பித்தவிட்டது' என தெரிவித்தனர் எதிர்காலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக  மாற்றீடு ஏற்பாடு ஒனிறினை செய்து இலகுவாக செல்லக்கூடியதாக பாதையை ஒழுங்குபடுத்த வேண்டும்

02. பெண்களுக்கான பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்ட போதிலும் பெண்களும் ஆண்களும் சந்திக்கின்ற சூழலும் இங்கு காணப்பட்டிருந்தது இதற்கான மாற்று ஏற்பாடு ஒன்றினை இஸ்லாமிக் சென்றர் எதிர்காலத்தில்  செய்தால்  சிறப்பாக இருக்கும்

03. மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் சுபஹ் தொழுகைக்கு சமூகமளித்து அதனைத் தொடர்ந்தே பெருநாள் தொழுகை இடம்பெறுகின்றது அந்த நடைமுறையினையும் எமது பிரதேசத்தில் அமுல்ப்படுத்தினால் சுபஹ் தொழுகையுடன் பெருநாள் தொழுகையும் உரிய நேரத்தில் கிடைக்கும்

04. மௌலவி அவர்கள் குத்பா ஓதிக்கொண்டிருந்த Nபுhது  ஒலி பெருக்கி இரைச்சலுடன் காணப்பட்டதால் சரியாக கேட்கமுடியாமல் போனதையும் அவதானிக்க முடிந்நது சற்று நேரத்தில் அது சீராக்கப்பட்டதையும் காணமுடிந்தது

இருப்பினும் இஸ்லாமிக் சென்றர் நிறுவனம் பல சிரமங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்கின்ற இந்த செயற்பாட்டிற்கு அல்லாஹ் அனைத்து சகோதரர்களுக்கும் நிறைவான கூலி கொடுப்பதுடன் நபி(ஸல்) அவர்களில் சுன்னத்தான திடலில் தொழும் நடைமுறையில் சில மாற்றங்களை எதிர்காலத்தில் செய்தால்  கலந்து கொள்ளும் எமது சகோதர சகோதரிகளுக்கு இலகுவாகவும் மிகச் சிறப்பாகவும் அமையும் என்பதுடன் பொதுமக்களின் பூரண ஒத்தழைப்பும் தேவை என்பது எல்லோரது எதிர்பாரப்பாகும்

எம்.எச்.எம்.அன்வர்
(ஊடகவியலாளர்)

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :