Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 25, 2015

Unknown

கொழும்பு நோக்கி சென்ற பஸ் மீது கல் வீச்சு; ஒருவர் காயம்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸின் மீது இன்று சனிக்கிழமை இரவு கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு சாலைக்கு சொந்தமான பஸ்ஸின் மீதே இரவு 9 மணியளவில் கல்வீசப்பட்டுள்ளது. 

தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் பஸ்ஸின் சாரதியான அஜித்குமார என்பவர் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பயணிகளை வேறு ஒரு பஸ்ஸில் கொழும்பு நோக்கி செல்லவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :