Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 11, 2015

Unknown

மட்டக்களப்பு,வன்னியில் தனித்தும் ஏனைய பகுதிகளில் ஐ.தே.க.வுடனும் மு.கா.போட்டி

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பட்­டி­யலில் போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்ள ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்­கிரஸ்,இரண்டு மாவட்­டங்­களில் மட்டும் தனித்து போட்டி­யி­டவும் முடி­வெ­டுத்­துள்­ளது. மக்கள் வழங்­கிய ஆணை­யினை காப்­பாற்­றவே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த அறி­வித்­தலை நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான ஆட்சி ஒன்­றினை அமைப்­ப­தற்­கான ஒரு கூட்டு ஒப்­பந்த தீர்­மா­னத்­துக்கு அமைய இம்­முறை பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­ட­வுள்­ளது.
ஜன­வரி 8ஆம் திகதி மக்­க­ளுடன் நாம் மேற்­கொண்ட உடன்­ப­டிக்­கையை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும். அதற்கு எமக்கு இருக்கும் ஒரே வழி­முறை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கைகோர்ப்­ப­தே­யாகும். ஆகவே இது­வரை எம்மால் செய்து கொள்­ள­மு­டி­யாத உடன்­ப­டிக்­கை­க­ளையும் , வென்­றெ­டுக்க முடி­யாத மக்­களின் அபி­லா­சை­க­ளையும் இதற்குப் பிறகும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கைகோர்த்து வென்­றெ­டுப்போம். அதேபோல் ஏனைய சிறு­பான்மை தலை­மை­க­ளுடன் பொது இணக்­கப்­பாட்டை மேற்­கொண்டு நாட்டை வலுப்­ப­டுத்­துவோம்.
இந்த கூட்டு ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இரண்டு மாவட்­டங்­களில் மாத்­திரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து போட்­டி­யி­டு­வ­துடன் ஏனைய குறிப்­பிட்ட சில மாவட்­டங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்தும் போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்ளோம்.
இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் மற்றும் வன்னி மாவட்­டத்­திலும் முஸ்லிம் காங்­கிரஸ் தனித்து போட்­டி­யிடும். அதே­நேரம் ஏனைய மாவட்­டங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையில் போட்­டி­யி­ட­வுள்ளோம்.
இதன் அடிப்­ப­டையில் கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி மக்­களின் யுகப் புரட்­சி­யுடன் நாம் உரு­வாக்­கிய நல்­லாட்­சியை பாது­காப்­ப­தற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கையில் நாம் தேர்­தலில் களம் இறங்­கு­கின்றோம். எம்மை பொறுத்த மட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்க, இந்த நாட்டில் ஊழல் மோச­டி­களை இல்­லாமல் செய்­வ­தற்­காக பெரும் தியா­கத்­தோடு கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் எமக்குக் கொடுத்த ஆத­ரவை சில பிற்­போக்கு சக்­திகள் முறி­ய­டிக்க முயற்­சித்து வரு­கின்­றன.
எந்த ஆட்­சி­யா­ளரை தோற்­க­டிக்க நாம் பாரிய முயற்­சி­களை எடுத்­தோமோ அந்த ஆட்­சியை மீண்டும் பின்­க­தவால் கொண்­டு­வரும் முயற்­சி­களை எதிர்க்­கட்­சி­யினர் செய்து வரு­கின்­றனர் என்­பது மிகப்­பெ­ரிய துர­திஷ்டம்.

எனவே அதை தடுக்கும் முயற்­சியில் நாம் இறங்­கி­யுள்ளோம். இதில் எம்­முடன் கைகோர்க்கும் வகையில் மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவ­டங்­களில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி எம்­முடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றது.

மேலும் எங்­க­ளுக்கு மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கைக்கு அமைய நல்­லட்­சிக்­கான தேசிய முன்­னணி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் எம்­முடன் இணைந்து மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­துடன் , திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யானைச் சினத்தில் எமக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள இரண்டு ஆச­னங்­களில் ஒன்றை அவர்கள் சார்பில் விட்டுக் கொடுக்கும் உடன்­பாட்டை எட்­டி­யுள்ளோம்.

அந்த அடிப்­ப­டையில் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் புதிய ஆட்­சியை உரு­வாக்­கு­வதில் பங்­க­ளிப்பு செய்த பல்­வே­று­பட்ட அமைப்­பு­களில் இவர்­களும் பிர­தா­ன­மான அமைப்­பாகும். இந்த பொதுத் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் இணை­வது பரந்­து­பட்ட அளவில் எதிர்­கா­லத்தில் முழு முஸ்லிம் சமூகத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு முன் முயற்சியாக நாம் இதை பார்க்கின்றோம். 

இந்த நடவடிக்கையின் மூலம் நாம் இருவரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்ற நம்பிக்கையோடு இந்த தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
virakesary.lk

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :