தேசிய போதை ஒழிப்பு மாதம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு ஜா-எல நகரசபை மைதானத்தில் நடை பெறுகிறது.
இன்று ஜூலை 9ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை போதை ஒழிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவிருப்பதுடன், நாடு முழுவதும் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும், போதைப் பாவனையைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயக் கோன் தெரிவித்தார்.
தேசிய போதை ஒழிப்பு மாதம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியின் செயலாளருடன் ஊடக அமைச்சின் செயலாளர் கருணார த்ன பரணவித்தாரன, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபயக்கோன், பொலிஸ் அதிகாரி ஜயந்த லியனகே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றார். இதற்காக விசேட செயலணியொன்றையும் அமைத்திருந்தார். இந்த நிலையிலேயே போதை ஒழிப்பு மாதம் இன்று முதல் நாடு முழுவதிலும் ஆரம்பமாவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பு மாதத்தின் ஆரம்ப நிகழ்வு ஜாஎலவில் நடைபெறும் நிலையில், மாதம் முழுவதும் போதை ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இன்றையதினம் சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதியின் விசேட செய்தி வாசிக்கப்படவிருப்பது டன், போதை ஒழிப்புத் தொடர்பாக பாடசாலை அதிபர்கள் விசேட உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு ஜனாதிபதி சகல நாட்டு மக்களுக்கு விசேட குறுஞ்செய்தியொன்றை இன்று அனுப்பவுள்ளார். பொலிஸ் திணைக்களம், சுகாதார அமைச்சு, கலால் திணைக்களம், அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பல இணைந்து நாடு முழுவதிலும் போதை தடுப்பு வேலைத்திட்டங்களை இந்த ஒரு மாத காலத்தில் முன்னெடுக் கவுள்ளன.
போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத மதுசார உற்பத்தி குறித்த தகவலல்களை பொதுமக்கள் தமக்கு வழங்கும் பட்சத்தில் சுற்றுவளைப்புக்களை நடத்தி அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்யவிருப்பதாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஜயந்த லியனகே கூறினார்.
நாடு முழுவதிலுமுள்ள 42 பொலிஸ் பிரிவுகளில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று இதற்காக நியமிக்கப் பட்டுள்ளது. போதை மற்றும் சட்டவிரோத மதுசார உற்பத்தி போன்ற முறைப்பாடுகளை பொலிஸ் திணைக்களத்தின் 0113024825, 0113024826, 0703117117, 0703118118, 0703119119 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமும், 0112354561 என்ற தொலைநகல் மூலமும், னீir.ணீriசீலீs@poliணீலீ.lk என்ற மின்னஞ்சல் மூலமும் முறைப்பாடு களைச் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான விசேட செயலணியின் 0114386840, 0114386485 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமும், 0112354561 என்ற தொலைநகல் மூலமும், psனீp@prலீsiனீலீntsoஜீஜீiணீலீ.lk என்ற மின்னஞ்சல் மூலமும் முறைப் பாடுகளைத் தெரிவிக்க முடியும்.
போதை ஒழிப்பு மாதத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கும், அரசாங்கத்தின் வேலைத்திட் டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் பரணவித்தாரன கேட்டுக்கொண்டார்.
