Featured Home (TOP)

Recent Comments

Saturday, July 25, 2015

Unknown

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் SLMC - NFGG ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

(NFGG ஊடகப்பிரிவு)

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் தேர்தல் கூட்டு ஒன்றினை ஏற்படுத்தி செயற்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
எதிர்பாராத விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இந்தத் தேர்தலுக்காக கூட்டிணைந்தமை முஸ்லிம் அரசியலில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டணி குறித்து சார்பாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இக்கூட்டணியின் நோக்கங்கள் குறித்து இலக்குகள் குறித்தும் இன்று 25.7.2015 சனிக்கிழமை கொழும்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
இவ்வுடன்படிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகம் MT.ஹசன் அலி அவர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் அவர்களும் கைச்சாத்திட்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் உட்பட இரு கட்சிகளின் முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

கீழே உள்ள இணைப்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்துக்களைக் காணலாம்.
https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?





Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :