Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 18, 2015

avathani Media Network

13 தேசியப்பட்டியல் ஆசனங்கள் சகிதம் 106 ஆசனங்களைப் பெற்றது ஐ.தே.க.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மாவட்ட மட்டத்தில் பெற்ற 93 ஆசனங்களுடன், 13 தேசியப்பட்டடியல் ஆசனங்கள் சகிதம் 106 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு மாவட்ட மட்டத்தில் 83 ஆசனங்களையும் தேசியப் பட்டியலில் 12 ஆசனங்களையும் பெற்று 95 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதேவேளை வடக்கு. கிழக்கு மாகாணங்களில் மூன்று மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட மட்டத்தில் 14 ஆசனங்கள் சகிதம் தேசியப் பட்டியலில் கிடைத்த இரண்டு ஆசனங்களுடன் 16 ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சியாக இடத்தை கைப்பற்றியுள்ளது.
ஜே.வி.பிக்கு மாவட்ட மட்டத்தில் நான்கு ஆசனங்களுடன் தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்கள் சகிதம் ஆறு ஆசனங்களும்இ  ஈபிடிபி மற்றும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளன.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :