Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 18, 2015

avathani Media Network

'அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம். அத்தோடு நாம் முன்னெடுத்துள்ள நல்லாட்சிக்கான வேலைத் திட்டத்தை எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுக்க உறுதி கொள்வோம்: தேர்தல் முடிவுகளையடுத்து பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

“ஆளுமை மிக்க ஒரு தலைமைத்துவம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதற்காகவே நாமெல்லோரும் சேர்ந்து உழைத்தோம், அதற்காவே இரவு பகலாகப் பாடுபட்டோம் என்றாலும் இறைவனுடைய ஏற்பாடு நாம் இந்தத் தேர்தல் மூலமாக எமது ஒரு பிரதிநிதி பாராளுமன்றம் செல்லமுடியவில்லை, 

இதனால் நாம் தோற்று விடவில்லை, சற்று சறுக்கியிருக்கிறோம். இரண்டு விடயங்களை முன்னிறுத்தி நாம் இந்தத் தேர்தலை நாம் எதிர்கொண்டோம். ஒன்று இங்கு இருக்கின்ற மக்களுக்கு விசுவாசமற்ற தீய அரசியல் சக்தி, மற்றது எமது பிரதிநிதித்துவம். அதில் ஒன்று நடந்திருக்கின்றது. மற்றையது நடக்கவில்லை. அதனைப் பொறுமையோடு எற்றுக் கொள்ள வேண்டும்” 

இவ்வாறு நேற்று நடை பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிக்கப்பட்டதைத் தொடாந்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில் இன்று காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் SLMC + NFGG கூட்டணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னம் இரண்டாம் இலக்கத்தில் வேட்பாளராக களமிறங்கிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நளீமிஅதன் தலைமைத்துவசபை உறுப்பினர் பொறியியலாளர் பழுலுல் ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இங்கு தொடர்நதும் அங்கு உரையாற்றிய அப்துர் ரஹ்மான்,

“இந்தத் தேர்தல் நமக்கு ஒரு தோல்வியல்ல ஒரு சறுக்கலாகவே கருத வேண்டும். இந்த ஊருக்குள் புரையோடிப்போயிருந்த தீய சக்தியை நாமெல்லோருமாகச் சேர்ந்து விரட்டியடித்திருக்கின்றோம். இது நமக்குக் கிடைத்த வெற்றியாகும். அது மாத்திரமல்லாமல்லாமல் உடலில் உட்கார்ந்திருந்த நோய்க்கிருமியை இப்போது அழித்திருக்கின்றோம் அதற்குரிய மருத்துவத்தை இனித்தான் நாம் செய்ய வேண்டியிருக்கிறது.

பாராளுமன்றத்தில் நமது சார்பில் நல்லாட்சிக்கான குரல் ஒன்று ஒலிக்க வேண்டும் நாம் நினைத்தோம் அது இப்போது முடியாமல் போய்விட்டது. என்றாலும் அதற்கான வாய்ப்புகளும் இன்னும் இருக்கிறது எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளை நாம் நாம் மேற்கொள்வோம்.

என்று அவரது சுருக்கமான உரையில் குறிப்பிட்டார். ஏராளமான ஆதரவாளர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.














avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :