Featured Home (TOP)

Recent Comments

Monday, August 17, 2015

avathani Media Network

நாடு முழுவதும் 70 வீதமான வாக்குகள் பதிவு

இன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுமார் 70 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகளும், களுத்துரை மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 75 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா 70 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 70 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் 60 வீதமான வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 71 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார் தொகுதியில் 74 வீதமான வாக்குகளும், முல்லைத்தீவில் 70 வீதமான வாக்குகளும், வவுனியாவில் 65 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், திகாமடுல்லை மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகளும், திருகோணமலை மாவட்டத்தில் 75 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் 68 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ள அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 66 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் 73 வீதமான வாக்குகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 75 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் கேகாலை மாவட்டம் ஆகியவற்றில் தலா 75 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :