பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 815 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று மாலை வரை பொலிஸார் முன்னெடுத்த 280 சுற்றிவளைப்புக்கள் மற்றும் 364 முறைப்பாட்டு விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த 815 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸார் முன்னெடுத்த 280 சுற்றிவளைப்புக்களில் 649 பேரும் 364 முறைப்பாட்டு விசாரணைகளுக்கு அமைவாக 166 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தராதரம் பாராது நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
