(ஏ.எல்.டீன்.பைரூஸ்)
மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும் பீல் மாஸ்டர் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியின் முன்னால் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீர்த்தா பிரபாகரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ் முன்னிலையில் சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட முன்னால் மாநகரசபை உறுப்பினர்கள் 06 போ் இணைந்து கொண்டனர்.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம் பெற்ற விசேட ஊடகவயலாளர் மாநாட்டின் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயரும் சிவகீர்த்தா பிரபாகரன் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக பல்வேறு பட்ட பணிகளை செய்த ஒருவா்தான் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்பு ல்லாஹ்
எனவே ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெறும் போது ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் பாராளுமன்றம் செல்வர் எனவே நாம் எதிர்வரும் நாட்களில் வீடு வீடாக சென்று தெர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க போவதாகவும் தெரிவித்தார்.