(-ஏ.எல்.டீன் பைரூஸ்-)
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.என்.எம்.மு பீன் அவா்களின் வேண்டு கோளின் பேரில், நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ,சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருமான றவுப் ஹக்கீம் அவா்களின் 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டின் கீழ் காத்தான்குடி கடற்கரையில் ”கடற்கரை பூங்காவின்” அங்குராா்ப்பன நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சா் ஹாபீஸ் நசீர் கலந்து கொண்டார்.
காத்தான்குடி கடற்கரையினை மேலும் அழகு படு்த்தம் நோக்கில் மேற் கொள்ளப்பட இத்திட்டத்தின் மூலம் அமையப் பெற்றுள்ள நடை பாதைக்கான பொருத்துக் கல் பதிக்கப்பட உள்ளதாகவும் கடற்கரை ஓரம் முழுவதுமாக நிழல் தரும் பல மரங்கள் நடப்பட்டு வருவதினையும் காணக் கூடியதாக உள்ளது.
மேற்படி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக எமது மக்கள் நல்ல பிரயோசனங்களை அடைந்து கொள்ள முடியும் என நகர அபிவிருத்தி தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ,சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருமான றவுப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் யு.எல்.என்.எம் முபீன் தெரிவித்தார்.