Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 25, 2015

avathani Media Network

பழிவாங்கும் அரசியல் கலாச்சாரம் முஸ்லிம் கட்சிகளுக்குள் ஆழமாய் வேறூன்றி உள்ளது அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி


(ஏ.எல்.டீன்பைரூஸ்)

முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் கலாச்சாரத்தின் பின்னரான பழிவாங்கும் அரசியல் கலாச்சாரம் என்பதற்கு மாற்றீடாக இழப்பீட்டுக்கலாச்சாரம் தற்போதய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. பெரும்பான்மை சமூக அரசியல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண அரசியலாகவே அமைந்திருக்கின்ற வேலை முஸ்லிம் அரசியல் பழிவாங்கும் அரசியல் கலாச்சாரத்தின் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதை நடந்து முடிந்த தேர்தலும் அதற்குப்பின்னரான நிலமைகளும் சாட்சியங்களாக உள்ளன என்று அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைவிட மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கால, தேர்தலுக்கு பின்னான நிகழ்வுகள் முஸ்லிம் சமூக அரசியல் கலாச்சாரத்தை கேளிக்கைக்கு உள்ளாக்கியுள்ளது. தேசிய ரீதியிலும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமுக நலனைவிட கழுத்தறுப்பு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததனை அவதானிக்க முடிந்தது. இதனால் நாட்டின் சில மாவட்டங்களில் எந்த கட்சியும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனதை தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற குரோத சித்தாந்தம் முஸ்லிம் கட்சிகளுக்குள் ஆழமாய் வேறூன்றி உள்ளது. 


மட்டக்களப்பு மாவட்ட அரசியலில்கூட இது விதி விளக்காக இருக்கவில்லை. இதன் வெளிப்பாடே இன்று மாவட்டத்தில் தோன்றியுள்ள அரசியல் வன்முறைகளுக்கு மூல காரணியாக காணப்படுகின்றது. அடுத்தவரை தோழ்வியடையச்செய்ய வேண்டும் என்ற சித்தாந்தமும், ஊடக் விபச்சாரத்தின் மூலம் சமூகத்தினுள் இரத்தங்களை ஓட்டி பொருட்சேதங்களை ஏற்படுத்த முனைந்த நிகழ்வுகள் ஏராளம். இலங்கை தளத்தில் நூரு வீத இஸ்லாமிய அரசியல் என்ற கோஷம் தற்போதய நடைமுறை அரசியலில் சாத்தியப்பாடான ஒன்றாக அமையாது என்பதனை விளங்கிக்கொள்ள வேண்டும். 

இஸ்லாமிய அரசியலா அல்லது அரசியல் இஸ்லாமா என்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற வேலை இஸ்லாமிய அரசியல் என்ற மாயைக்குள் புதிய தலைமுறையினை சிக்க வைத்து களநிலையில் கொள்கை முரண்பாட்டு அரசியலுக்குள் சிக்குண்டு தவிக்கும் கொள்கைவாத அரசியலும் இல்லாமலும் இல்லை. இலங்கை அரசியலில் முஸ்லிம் அரசியல் அவ்வப்போது ஆசனத்துக்காக அள்ளுண்டு போன வரலாறாக உள்ளதனையே காணமுடிகின்றது. 

திவிநெகும சட்டமூலம், ஜேம்ஸ் போக்கரின் கசினோ மீதான ஆதரவு வாக்களிப்பு, ஜனாதிபதி முறைமையினை நீடித்தல் எனும் 18வது சரத்துக்கான ஒத்துழைப்பு என பல்வேறு சிறுபான்மை அரசியல், கலாச்சார உரிமைமீரல்களுக்கு முட்டுக்கொடுத்த துரோகத்தனங்கள் ஏராளம். இறுதியாக நல்லாட்சி என்ற மாயைக்குள் சிறுபான்மை சமூகம் ஆகர்ஷிக்கப்பட்ட போது “வண்டிலுக்கு கிளால போன நாய்” என்ற பலமொழிக்கமைவாக முஸ்லிம் சமூகம் மைத்திரியை ஆதரிக்க முடிவு கட்டியபின்னர் இறுதியில் சமூகத்தினுள் நுழைந்து கொண்டு தாம்தான் ஆட்சி மாற்றத்தின் அடிநாதம் என கூப்பாடு போட்டு திரிந்ததையும் எவரும் மறந்த பாடில்லை. 

இத்தகைய கையருவற்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளும் மலக்குகளாகவோ அல்லது நபிமார்களாகவோ இருப்பார்களென கருதி சமூகத்தளத்தினுல் அரசியல் பிளவுகளை உண்டுபண்ணுவது இஸ்லாமிய அடிப்படையில் ஏற்புடையதாக அமையாது. இன்று ஒரு அரசியல் வாதி ஒருவரை எதிர்க்கின்ற போது அவரைவிடவும் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் பின்னிளைவாதம் கொண்டவர்களுடன் கைகோர்த்து செயற்படுவது நியாயமாக கொள்ளமுடியாது. 

இஸ்லாமிய கோட்பாட்டில் “நிர்ப்பந்த ரீதியில் தெரிவு இடம்பெறும்போது இரண்டு தீமைகளில் குறைந்தளவு தீமையினை தெரிவு கொள்ளல் என்ற” விடயம் எல்லாவற்றிட்கும் பொருத்தமானது. இந்த வகையில் அரசியல் வாதிகள் ஒவ்வொருவரும் கைகோர்த்துள்ள கொள்கைகளும் சித்தார்ந்தங்களும் ஒன்றை மற்றொன்று விஞ்சியதாகவே காணப்படுகின்றது. தீமைகளை எதிர்க்கின்றோம் என்ற எண்ணத்தில் “லேபல் மாறியதே தவிர பாணி ஒன்றே” என்ற இலங்கை அரசியல் தலைமைகளிடத்தில் நியாயம் கோரிச்செல்வதும் அதற்காக வேண்டி மிகக்கோரமான தீவினையை துணைக்கிழுத்துக்கொள்வதும் இஸ்லாமிய பண்பாட்டு முறையாக அமைய வாய்ப்பில்லை. 


குறித்த அரசியல் பழிவாங்கல் மனநிலையில் இன்னுமொரு விடயத்தை தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும். தற்போதய சந்தர்ப்பவாத அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் பிரதிநித்துவத்தை அதிகரிப்புச்செய்வதற்கான செயற்திட்டங்களையும் வழிமுறைகளையும் சமூகத்திற்கு முன்வைக்க வேண்டுமே தவிர கிடைக்கின்ற பிரநித்தித்துவத்தையும் இலக்கச்செய்கின்ற நடவடிக்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தீர்மானத்தில் பாரிய தாக்கத்தினையும் ஏற்படுத்தும். எனவே மாற்றுக்கருத்துக்களை, கருத்துக்களாலும், பண்பாட்டினாலும், விட்டுக்கொடுப்பினாலும், ஏற்றுக்கொள்தலினாலும் வாழவைக்கமுடியும் என்பதனை பழிவாங்கும் அரசியல் புரியும் எவரும் விளங்கி கொள்ள வேண்டும்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :