Featured Home (TOP)

Recent Comments

Friday, August 28, 2015

avathani Media Network

பதவிகளுக்கான இழுபறியும் நல்லாட்சியும்


இலங்­கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்­ததைத் தொடர்ந்து ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைத்­துள்­ளன.

இதற்­க­மை­வாக நாட்டின் பிர­த­ம­ராக ரணில் விக்­ர­ம­சிங்க பத­வி­யேற்றார். இதனைத் தொடர்ந்து அவ­ச­ர­மாக மூவ­ருக்கு அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட்­டன. வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக மங்­கள சம­ர­வீ­ரவும் நீதி­ய­மைச்­ச­ராக விஜே­தாச ராஜ­பக்­சவும் புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக டி.எம்.சுவா­மி­நா­தனும் ஜனா­தி­பதி முன்­னி­லையில் பத­வி­யேற்றுக் கொண்­டனர்.



இந்­நி­லையில் மீத­முள்ள அமைச்சுப் பத­வி­களை பங்­கி­டு­வதில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டையே பெரும் இழு­பறி தோன்­றி­யுள்­ள­தா­கவும் அதுவே அமைச்­சர்கள் நியம­னத்தில் தாமதம் ஏற்­படக் காரணம் எனவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

அமையப் பெற்­றுள்ள தேசிய அர­சாங்­கத்தில் 40 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­களும் 10 இரா­ஜாங்க அமைச்­சர்­களும் 30 பிர­தி­ய­மைச்­சர்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இந்த அமைச்­சுக்­களைப் பங்­கி­டு­வ­தி­லேயே தற்­போது இழு­பறி நிலை தோன்­றி­யுள்­ளது.

19 ஆவது திருத்தத்திற்கமைவாக அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை 30 ஐ விட அதிகரிப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.

அதற்கமைவாக எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி பாராளுமன்றம் கூடி அமைச்சரவை நியமனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கிய பின்னரே  புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எது எப்­ப­டி­யி­ருப்­பினும் அமையப் பெற்­றுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எழுந்­துள்ள அமைச்சுப் பத­விகள் தொடர்­பான இழு­பறி நிலை தேசிய அர­சாங்­கத்தின் வெற்­றி­க­ர­மான நகர்­வுக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம் என அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அது­மாத்­தி­ர­மன்றி தேர்தலில் தோல்வியுற்றவர்களிலிருந்து தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு உகந்ததல்ல எனும் விமர்சனங்களும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

தேசியப் பட்டியல் மூலம் தேர்தலில் தோல்வியுற்றவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியதற்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஆக அமைச்சுப் பதவிகளுக்கானதும் தேசியப் பட்டியல் தொடர்பானதுமான இழுபறியும் கருத்து முரண்பாடுகளும் நல்லாட்சி அரசாங்கத்தின் சுமுகமான இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்குமானால் அது மக்கள் ஆகஸ்ட் 17 இல் மீள் உறுதிப்படுத்திய ஜனவரி 8 மாற்றத்தை குழிதோண்டிப் புதைப்பதாக அமைந்துவிடும்.

இது தொடர்பில் இரு தரப்பு அரசியல் தலைமைகளும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :