Featured Home (TOP)

Recent Comments

Friday, August 28, 2015

avathani Media Network

மன்னிப்பு கோரிக்கை நீதிவானால் நிராகரிப்பு

கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­ட­டத்­துக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக புகுந்து குழப்பம் விளை­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பௌத்த குரு­மார்கள் பொலி­ஸாரால் அவர்­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை மன்­னிப்பு கோரி சமா­தா­ன­மாக தீர்த்துக் கொள்ள கொழும்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யிடம் அனு­மதி கோரிய போதும் நீதிவான் அதற்­கான அனு­ம­தியை மறுத்­துள்ளார்.
நேற்றுக் காலை கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் குறிப்­பிட்ட வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது பொது­ப­ல­சே­னாவின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி வழக்கை சமா­தா­ன­மாக தீர்த்துக் கொள்ள விரும்­பு­வ­தா­கவும் அதற்­காக மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தா­கவும் நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.


குறிப்­பிட்ட 6 பௌத்த குரு­மார்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களில் ஒன்­றான சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்று கூடி­யமை மன்­னிக்கக் கூடிய ஒரு குற்றச் செய­லல்ல எனத் தெரி­வித்த நீதிவான் அந்தக் குற்றம் குற்றப் பத்­தி­ரி­கை­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே மன்­னிப்புக் கோரி சமா­தா­ன­மாக வழக்­கினைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று தெரி­வித்தார்.

நேற்று நீதி­மன்றில் பிர­தி­வா­தி­க­ளான பொது­ப­ல­சேனா அமைப்பின் 6 குரு­மார்­களில் 4 பேர் மாத்­தி­ரமே நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இவர்­களில் 3 ஆம் 5 ஆம் சந்­தேக நபர்­க­ளான சந்­திஸ்­தர தேரர் மற்றும் பன்­ஞா­ஜோதி தேரரும் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை.

சந்­தேக நபர்கள் ஆறு பேரையும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறும் நீதிவான் கொள்­ளுப்­பிட்­டிய பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

நீதி­மன்­றுக்கு வருகை தந்­தி­ருந்த குருமார் நால்­வரும் நடந்த சம்­ப­வத்­துக்கு வருத்தம் தெரி­விப்­ப­தா­கவும் அதற்­காக மன்­னிப்பு கோரி சமா­தா­ன­மாக விரும்­பு­வ­தா­கவும் RRT அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள் சிராஸ் நூர்தீன், மைத்­திரி குணரத்ன ஆகியோரிடமும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பாலிதலியனகே விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 1 ஆம்  திகதிக்கு ஒத்திவைத்தார்.
Source - vidivelli.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :